கோயில் நிலம் மீட்பு

தண்டையார்பேட்டை: சென்னை பூங்கா நகர், ராசப்ப செட்டி தெருவில், முத்துக்குமார சுவாமி கோயில், அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோயிலின் ராஜகோபுரம் கீழ்புறம், மேற்கு பகுதியில், கோகிலா என்பவர் வாடகைதாரராக இருந்தார். கோயில் பயன்பாட்டிற்கு அந்த இடம் தேவைப்பட்டதால், வாடகைத்தாரரை காலி செய்யுமாறு அறநிலையத்துறை அறிவுறுத்தியது. ஆனால்,  வாடகைதாரர் காலி செய்யவில்லை. இதுகுறித்து, கோயில் நிர்வாகம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

கடந்த 30ம் தேதி அறநிலையத்துறைக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கப்பட்டது. அதன்பேரில், நேற்று மாலை, அறநிலையத்துறை உதவி ஆணையர், செயல் அலுவலர்  உள்ளிட்ட அதிகாரிகள், பூக்கடை போலீசார் பாதுகாப்புடன், கோயிலுக்கு சொந்தமான 133. 65 சதுர அடி இடத்தை மீட்டு சீல் வைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories:

>