×

ஸ்டெர்லைட் ஆலை வழக்குகளை நீதிபதி சிவஞானம், பவானி சுப்பராயன் அமர்வே விசாரிக்க வேண்டும்: ஐகோர்ட் தலைமை நீதிபதி

சென்னை: ஸ்டெர்லைட் ஆலை வழக்குகளை நீதிபதி சிவஞானம், பவானி சுப்பராயன் அமர்வே விசாரிக்க வேண்டும் என்று ஐகோர்ட் தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார். வழக்குகளை தொடக்கத்தில் இருந்தே சிவஞானம், பவானி சுப்பராயன் அமர்வு விசாரித்து வந்த நிலையில் சிவஞானம் மதுரை கிளைக்கு மாற்றப்பட்டார். சிவஞானம் மதுரை கிளைக்கு மாற்றப்பட்டதால் ஸ்டெர்லைட் வழக்குகளை முன்னாள் தலைமை நீதிபதி தஹில் ரமாணி வேறு அமர்வுக்கு மாற்றினார். நீதிபதிகள் சிவஞானம், பவானி சுப்பராயன் அமர்வு காணொலிக்காட்சி மூலம் வழக்கு விசாரணையை நடத்துவர் என ஐகோர்ட் தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Tags : Sivagnanam ,Bhavani Subbarayan Amarawe ,Sterlite ,Bhavani Subramanian Amarawe ,Chief Justice ,iCord Justice Sivagnanam ,Icourt , Sterlite Plant, Justice Sivagnanam, Bhavani Subramanian, Chief Justice
× RELATED உச்ச நீதிமன்றம் திட்டவட்டம் ஸ்டெர்லைட் ஆலை திறக்க அனுமதிக்க முடியாது