×

திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோயிலில் பவுர்ணமி கிரிவலம் - ஊஞ்சல் உற்சவம்

பண்ருட்டி: பண்ருட்டி அருகே திருவதிகையில் உள்ள பெரியநாயகி சமேத வீரட்டானேஸ்வரர் கோயிலில் நேற்று பவுர்ணமியை முன்னிட்டு கிரிவலம் மற்றும் ஊஞ்சல் உற்சவம் நடந்தது. இதனை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, அலங்காரம், மற்றும் சிறப்பு தீபாராதனை நடந்தது. நேற்று மாலை 6 மணி அளவில் மாடவீதியை சுற்றி கிரிவலம் தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு 16 முறை மாடவீதியை சுற்றி கிரிவலம் வந்தனர்.

மாடவீதியை சுற்றி 16 முறை வருவதற்கு காரணம் 16 பட்டைகள் கொண்ட மூலவர் வீரட்டானேஸ்வரர். இதனால் 16 பேறுகளை பெற்று வாழலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இந்நிலையில் நேற்று இரவு 7.30 மணி அளவில் உற்சவர் அம்பாள் பெரியநாயகி 16 கால் மண்டபத்தில் ஊஞ்சல் உற்சவத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதனை தொடர்ந்து இரவு 11 மணி அளவில் அர்த்தஜாம பூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Purnami Girivalam - Swing Festival , Thiruvathi Veerathaneswarar Temple, Pournami Grivalam
× RELATED பலாப்பழத்தை பறிக்க மரத்தை...