×

திருமங்கலம் அருகே குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்: அதிகாரிகள் வேடிக்கை

திருமங்கமலம்: திருமங்கலம் அருகே ராயபாளையம் கிராமத்தில் கடந்த 20 நாள்களுக்கு மேலாக காவிரிகூட்டுக்குடிநீர்த்திட்ட குழாய் உடைந்து குடிநீர் வீணாகி வருகிறது. மதுரை மாவட்டம், திருமங்கலம் நகராட்சி மற்றும் ஒன்றிய பகுதிகளுக்கு கரூர் மாவட்டத்திலிருந்து காவிரி கூட்டுக்குடி நீர்த்திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதில் ஒன்றிய பகுதிகளுக்கு செல்லும் குடிநீர் குழாய் பைப்லையன்களில் அடிக்கடி குழாய் உடைந்து தண்ணீர் வீணாகி செல்வது வாடிக்கையாகி வருகிறது. இந்த நிலையில், திருமங்கலத்தை அடுத்துள்ள ராயபாளையம் கிராமத்திலிருந்து மீனாட்சிபுரம், சமத்துவபுரத்திற்கு செல்லும் பைப்லையனில் சில தினங்களுக்கு முன்பு குழாய்களில் வெடிப்பு ஏற்பட்டு உடைந்தது.

இதனால் காவிரிகுடிநீர் விநியோகம் நடைபெறும் நாள்களில் தண்ணீர் உடைந்த இடத்தில் வீணாக கீழே செல்கிறது. இதன் காரணமாக பக்கத்து கிராமங்களுக்கு குடிநீர் செல்ல முடியாததால் தண்ணீர் பிரச்னை எழுந்துள்ளது. இது குறித்து ராயபாளையம் பகுதி மக்கள் காவிரி கூட்டுக் குடிநீர்த்திட்ட அதிகாரிகள், திருமங்கலம் ஒன்றிய அதிகாரிகளுக்கு பல முறை தகவல்கள் கொடுத்தும் அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை என வேதனை தெரிவித்தனர். அதிகாரிகள் விரைவில் உரிய நடவடிக்கை எடுத்து வீணாக செல்லும் காவிரி கூட்டுக் குடிநீர் திட்ட பைப்லையன் அடைப்பை சரி செய்ய கோரிக்கை எழுந்துள்ளது.



Tags : pipe break ,Tirumangalam , Thirumangalam, drinking water, officials fun
× RELATED சென்னை திருமங்கலத்தில் உள்ள...