×

ஆட்டமிழந்த விரக்தியில் தங்கும் அறையின் சுவற்றில் தனது கையால் பலமாக குத்தி காயம் ஏற்படுத்திய ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் மிச்செல் மார்ஷ்

பெர்த்: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் மிச்செல் மார்ஷ், தான் ஆட்டமிழந்த விரக்தியில், வீரர்கள் தங்கும் அறையின் சுவற்றில் தனது கையால் பலமாக குத்தியதில் அவரது கையில் காயம் ஏற்பட்டுள்ளது. டாஸ்மானியா மற்றும் மேற்கு ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான உள்ளூர் கிரிக்கெட் போட்டியொன்று பெர்த் நகரில்  நடைபெற்றது. இதில்  மேற்கு ஆஸ்திரேலியா அணிக்காக களமிறங்கிய மிச்செல் மார்ஷ், அரைசதம் அடித்தார். பின்னர் சில நிமிடங்களிலேயே அவர் ஆட்டமிழந்தார்.

இதையடுத்து களத்திலிருந்து ஓய்வறைக்கு திரும்பிய அவர், தான் ஆவுட் ஆன விரக்தியில், அறையின் சுவற்றில் தனது கையைக் கொண்டு பலமாக குத்தியுள்ளார். இதில், அவரது வலது கையில் காயம் ஏற்பட்டதால், அவரால் பந்துவீச முடியாத சூழல் தற்போது ஏற்பட்டுள்ளது. காயமடைந்த அவருக்கு சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதால், அடுத்த மாதம் நடைபெறவுள்ள பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் அவர் பங்கேற்பதில் சிக்கல் உருவாகியுள்ளது.

Tags : Michelle Marsh ,cricket team ,Australian ,lounge , Frustration, injury, Australian, cricket team, Mitchell Marsh
× RELATED சில்லி பாயின்ட்...