×

அம்முகுட்டி என்ற குட்டியானையை வனப்பகுதிக்குள் விடுவதற்கு தடை கோரி வழக்கு: அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: காட்டில் விடப்பட்டுள்ள 3 மாத குட்டி யானையை, யானைக் கூட்டத்துடன் சேர்க்கும் நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் அம்முகுட்டி என்ற குட்டியானையை வனப்பகுதிக்குள் விடுவதற்கு தடை கோரி வழக்கில் தமிழக வனத்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. காட்டில் விடப்பட்ட குட்டியானையை கண்காணித்து வருகிறோம், அதை மற்ற யானைகள் சேர்த்துக் கொள்ளாவிட்டால், வனத்துறை கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ளும் என தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. மூன்று மாத குட்டியானை தனக்கான உணவை தேட முடியாது என்பதால் அதற்கு எப்படி பால் கிடைக்கும்?  நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். பிற விலங்குகளால் ஆபத்து ஏற்படும் என்பதால், ஒருவேளை யானைக்கு ஏதேனும் அசம்பாவிதம் நேர்ந்தால் அதற்கு அரசு பொறுப்பேற்குமா? எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.


Tags : Ammukutty Ammukutty , HC , file case, agains, Ammukutty
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை சமூகநீதி...