×

பார்வையில்லாத முதல் பெண் ஐஏஎஸ் அதிகாரி பிரஞ்சில் பாட்டீல் திருவனந்தபுரம் சப்- கலெக்டராக பொறுப்பேற்றார்

திருவனந்தபுரம்: இந்தியாவிலேயே கண் பார்வையில்லாத முதல் பெண் ஐஏஎஸ் அதிகாரி பிரஞ்சில் பாட்டீல் திருவனந்தபுரம் சப்- கலெக்டராக பொறுப்பேற்றார். மகாராஷ்டிரா மாநிலம் உல்லாஸ் நகரை சேர்ந்தவர் பாட்டீல். இவரது மகள் பிரஞ்சில் பாட்டீல். 6வது வயதில் கண்பார்வையை இழந்தார். ஆனாலும் மனம் தளராமல் தொடர்ந்து பள்ளி படிப்பை முடித்தார்.

தொடர்ந்து மும்பை செயின்ட் சேவியர்ஸ் கல்லூரியில் அரசியல் அறிவியல் இளங்கலை பட்டமும், டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் சர்வதேச தொடர்பு துறையில் முதுகலை பட்டமும் பெற்றார். அதன் பிறகு சிவில் சர்வீஸ் தேர்வுக்கு பயிற்சி மேற்கொண்டார். 2016ல் சிவில் சர்வீஸ் தேர்வில் 773வது ரேங்க் பெற்றார். இதையடுத்து அவருக்கு இந்திய ரயில்வேயில் கணக்கு பிரிவில் நியமனம் தரப்பட்டது. ஆனால் கண் பார்வையில்லாதவர் என்பதால் அந்த வேலை கிடைக்கவில்லை.

இதனால் மீண்டும் 2016ல் தேர்வு எழுதி 124வது ரேங்க் பெற்று ஐஏஎஸ் அதிகாரியானார். இதையடுத்து கண்பார்வையில்லாத முதல் பெண் ஐஏஎஸ் அதிகாரி என்ற சாதனையை படைத்தார். இவருக்கு கேரளா கேடர் வழங்கப்பட்டது. கடந்த சில மாதத்துக்கு முன்பு எர்ணாகுளம் சப்-கலெக்டராக பொறுப்பேற்றார். அங்கிருந்து திருவனந்தபுரம் சப்-கலெக்டராக மாற்றப்பட்டார். அதன்படி இன்று காலை திருவனந்தபுரத்தில் சப்-கலெக்டராக பொறுபேற்றுக்கொண்டார். அவருக்கு சக அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

Tags : Franchil Patil ,Thiruvananthapuram ,Sub-Collector ,Francesil Patil , Blind female IAS officer, Franchil Patil, Thiruvananthapuram, Sub-Collector
× RELATED திருவனந்தபுரத்தில் நாட்டு வெடிகுண்டு வெடித்து 4 வாலிபர்கள் படுகாயம்