×

புதுச்சேரியில் நடுக்கடலில் மீனவர்கள் மோதிக்கொண்ட விவகாரம்: மீனவ கிராமங்களுக்கு 144 தடை உத்தரவு

புதுச்சேரி: புதுச்சேரி அருகே மோதலில் ஈடுப்பட்ட வீராம்பட்டினம், நல்லவாடு கிராமங்களில் 144 தடை உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது. வீராம்பட்டினம், நல்லவாடு கிராமங்களில் பாதுகாப்பு பணிக்காக 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். புதுச்சேரியை அடுத்த நல்லவாடு மற்றும் வீராம்பட்டினம் மீனவ கிராமங்களுக்கிடையே கடந்த ஒரு மாத காலமாக சுருக்குவலை பயன்படுத்துவது தொடர்பாக தகராறு ஏற்பட்டு வருகிறது. இந்த விவகாரத்தில் கடந்த 10 தினங்களுக்கு முன்னதாக நல்லவாடு கிராமத்தில் இருந்த மீன் வலைகளை மர்மநபர்கள் தீயிட்டு எரித்தனர். இது தொடர்பாக தவலகுப்பம் போலீசார் 2 பேரை கைது செய்தனர். இதன் காரணமாக இருக்கிராமகளுக்கு இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

இந்த நிலையில் இன்று இரு மீனவ கிராம்களுக்கு இடையே நடுக்கடலில் மோதல் ஏற்பட்டுள்ளது. கடலில் மீன் பிடித்து கொண்டிருந்தபோது, வலை போடுவதில் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. மேலும், இரு கிராம மீனவர்களும் கடற்கரையிலும் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கிக் கொண்டனர். இதில் இருவர் காயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், கலவரத்தை கட்டுப்படுத்த துப்பாக்கிச்சூடு நடத்தியாக கூறப்படுகிறது. இதையடுத்து மீனவர்கள் கலைந்து சென்றுள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது. அதேபோல இந்திய கடலோர காவல்படையும் சம்பவ இடத்திற்கு வந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக முதன்மை காவல் அதிகாரி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அசம்பாவிதங்கள் நடந்தால் துப்பாக்கிசூடு நடத்த வருவாய்த்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இந்த நிலையில், நல்லவாடு, வீராம்பட்டினம் ஆகிய இரு மீனவ கிராமங்களிலும் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.

Tags : Fishermen ,Puducherry ,affair ,sea ,fishing villages , Puducherry, fishing villages, 144 ban
× RELATED இலங்கை சிறையிலிருந்து...