×

ஈரோடு, சேலம், தருமபுரி, நாமக்கல் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை : ஈரோடு, சேலம், தருமபுரி, நாமக்கல், திருப்பூர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, நாகை, தஞ்சை ஆகிய 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெப்பச்சலனம் காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும் சென்னையை பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் அதிகபட்சமாக 34 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சமாக 27 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகக் கூடும். கடந்த 24 மணி நேரத்தில் கொடைக்கானலில் 8 சென்டிமீட்டர் மழையும், நீலகிரி மாவட்டம் கோத்தகிரி, சேலம் மாவட்டம் மேட்டூர் ஆகிய இடங்களில் தலா 4 சென்டிமீட்டர் மழையும் பதிவாகி உள்ளது.இந்த நிலையில், வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சாதகமான சூழல் உருவாகியுள்ளதால் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. முன்னதாக மேற்குத் திசையில் இருந்து வீசும் காற்று நின்று கிழக்குத் திசையில் இருந்து காற்றுவீசத் தொடங்கியுள்ளதால் வடகிழக்கு பருவமழை வரும் 17 ஆம் தேதி முதல் தொடங்க வாய்ப்புள்ளதாகவும், வடகிழக்கு பருவமழை இயல்பான அளவிலேயே பெய்யும் என வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்திருந்தது.


Tags : districts ,Salem ,Erode ,Dharmapuri ,Namakkal , Meteorological Center, Southwest, Monsoon, Temperature, Northeast
× RELATED கோடை விடுமுறையையொட்டி தாம்பரம்-மங்களூரு சிறப்பு ரயில்