×

சமயபுரம் பஞ்சாப் நேஷனல் வங்கி கொள்ளை வழக்கில் துப்பு துலங்கிவிட்டதாக திருச்சி எஸ்.பி பேட்டி

திருச்சி: சமயபுரம் பஞ்சாப் நேஷனல் வங்கி கொள்ளை வழக்கில் துப்பு துலங்கிவிட்டதாக திருச்சி எஸ்.பி பேட்டியளித்துள்ளார். லலிதா ஜூவல்லரி கொள்ளை வழக்கில் தொடர்புடைய முருகன், சுரேசுக்கு வங்கி கொள்ளை வழக்கிலும் தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. முருகன், சுரேஷ், வாடிப்பட்டி கணேஷ், தஞ்சாவூர் ராதாகிருஷ்ணன் வங்கி கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். பிடிபட்ட தஞ்சாவூர் ராதாகிருஷ்ணன் வெல்டிங் தொழில் செய்து வந்துள்ளார். ராதாகிருஷ்ணனை திண்டுக்கல் அருகே சுற்றி வளைத்து பிடித்ததாக எஸ்.பி. ஜியா உல் ஹக் விளக்கம் அளித்துள்ளார்.


Tags : Trichy SP ,robbery ,Punjab National Bank ,Interview , Trichy SP,Interview, Punjab National Bank ,Robbery Case
× RELATED தமிழகத்தில் சினிமா படப்பிடிப்புக்கு...