வரைவு வாக்காளர் பட்டியல் நவ. 25-ல் வெளியீடு: பட்டியலை சரிபார்க்க 10 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்...தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி

சென்னை: தமிழகம் முழுவதும் வாக்காளர் சரிபார்ப்பு திட்டம் செப்டம்பர் 1ம் தேதி முதல் 30ம் தேதி வரை நடந்தது. இந்த திட்டத்தின் மூலம் வாக்காளர் பட்டியலில் பெயரில் எழுத்து பிழை, வயது, பாலினம் ஆகியவற்றில் தவறு இருந்தால்   வாக்காளர்களே நேரடியாக ‘voters help line’ என்ற செல்போன் செயலி மூலம் திருத்தங்களை பொதுமக்கள் செய்தனர். மேலும் தேர்தல் ஆணையத்தின் ஆப், 8,095 பொது மையங்கள், 1,662 இ-சேவை மையங்கள், 97 வாக்காளர் சேவை  மையங்களிலும் வாக்காளர்கள் திருத்தங்கள் செய்து கொண்டனர்.

இந்நிலையில் வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்வது, கடந்த செப்டம்பர் 30ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், பொதுமக்களின் கோரிக்கைக்கு ஏற்ப, மேலும் இரண்டு வாரம், அவகாசம் நீட்டிக்கப்பட்டது. அதன்படி, வாக்காளர்   பட்டியலில், வாக்காளர்கள், அக்டோபர் 15ம் தேதி வரை, திருத்தங்கள் மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதை ஏராளமானோர் மொபைல் ஆப் மூலமாகவும், பொது மையங்கள் மற்றும் இ சேவை மையங்கள் மூலமாகவும்   பயன்படுத்திக் கொண்டனர். தற்போது வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள 34 லட்சத்து 70 ஆயிரத்துக்கும் அதிகமானோர் மொபைல் ஆப்  பயன்படுத்தியுள்ளனர். இதில், 1.65 லட்சம் பேர் திருத்தம் செய்துள்ளனர். அதேபோன்று பொது   மையங்கள் மூலமாகவும் லட்சக்கணக்கானோர் திருத்தம் செய்துள்ளனர். தொடர்ந்து பலர் முகவரி மாற்றம், பெயர் உள்ளிட்ட திருத்தம் செய்ய வேண்டி உள்ளது.

இது குறித்து நேற்று பேட்டியளித்த தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, பொதுமக்கள் திருத்தம் செய்ய கால அவகாசம் கேட்ட நிலையில், வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய செப்டம்பர் 30 ம் தேதியில் இருந்து அக்டோபர்  15ம் தேதி வரை அவகாசம் நீடிக்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் கால அவகாசம் நவம்பர் 18ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தின் வரைவு வாக்காளர் பட்டியல் நவம்பர் 25ம் தேதி வெளியிடப்படும் என்றார்.  இந்நிலையில், இன்று பேட்டிளித்த தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, வாக்காளர் பட்டியலை சரிபார்க்க 10 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். நியமிக்கப்பட்ட 10 ஐஏஎஸ் அதிகாரிகளுடன் தமிழக தலைமை தேர்தல்  அதிகாரி சத்யபிரதா சாகு ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

Related Stories:

>