×

பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல்

புதுடெல்லி: இணைய வழி வர்த்தக நிறுவனங்கள் ஒரு முறை மட்டும் பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக்கை குறைத்துக் கொள்ள வேண்டும் என்று வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது. இதுதவிர, தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறையும், இணைய வர்த்தக நிறுவனங்கள், தங்கள் வணிகத்தில் பிளாஸ்டிக்குக்கு மாற்றாக வேறு பொருட்களை பயன்படுத்துவதை யோசிக்க வேண்டும். அதன் மூலம் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது. இதையடுத்து பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் குறைக்கும் விதமாக மாற்று வழிமுறைகளை பரிசீலித்து வருகிறோம் என்று இணைய வர்த்தக நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

Tags : e-commerce companies , Instructions for Plastic, Reduce, E-Commerce Companies
× RELATED கல்வியின் பயன் என்ன?