×

உசிலம்பட்டி அருகே வேப்ப மரத்தில் பால் வடிந்ததால் பரபரப்பு

உசிலம்பட்டி: உசிலம்பட்டி அருகே வேப்பமரத்தில் பால் வடிந்ததால், பக்தர்கள் அம்மனின் அவதாரம் என வழிபாடு நடத்தினர். மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகேயுள்ளது பூச்சிபட்டி. இந்த ஊர் மலையடிவாரத்தில் குஞ்சாம்பட்டியைச்சேர்ந்த வைரவன் என்பவரது தோட்டத்திலுள்ள ஒரு வேப்பமரத்தில் பால் வடிந்தது. கடந்த 3 நாட்களாக வரும் இந்த பால்வடியும் நிலை வேப்பமரத்தில் மாறவில்லை. இத்தகவலறிந்து இப்பகுதியிலுள்ள பூச்சிபட்டி, நக்கலப்பட்டி, குஞ்சாம்பட்டி, பாண்டிகோவில் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் ஆர்வமுடன் வேப்பமரத்தில் பால் வடிவதை பார்த்து செல்கின்றனர். அதில் பெண் பக்கதர்கள் மஞ்சள் பட்டு உடுத்தி வேப்பமரத்திற்கு மஞ்சள் மாலை அணிவித்து அம்மன் அவதாரம் அளிப்பதாக கூறி வணங்கினார்கள். இப்பகுதியிலுள்ள கிராமங்களில் இருந்து பொதுமக்கள் தொடர்ந்து வந்து கொண்டிருப்பதால் இப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.

இது குறித்து வேளாண்மைத்துறை அதிகாரிகளை தொடர்கொண்டபோது, பருவநிலை மாற்றத்தால் இது போன்ற திரவம் சில மரங்களில் வரக்கூடும். இதனால் எந்தவொரு பாதிப்பும் இருக்காது. பல வருடங்களாக மழையில்லமல், திடீரென மழை பெய்தாலும் இது போன்ற நிகழ்வுகள் நடப்பது வழக்கம்தான் என்றார்.

Tags : Usilampatti Usilampatti , Usilampatti
× RELATED உசிலம்பட்டி அருகே காட்டுப்பன்றிகளால்...