×

தமிழகத்தில் இன்று முதல் 18-ம் தேதி வரை 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு

சென்னை : தமிழகத்தில் இன்று முதல் 18-ம் தேதி வரை 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெப்ப சலனம் மற்றும் தென்மேற்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, நாமக்கல் உள்ளிட்ட உள் மாவட்டங்களில் மழை பெய்தது. இந்த நிலையில், வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சாதகமான சூழல் உருவாகியுள்ளதால் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. முன்னதாக மேற்குத் திசையில் இருந்து வீசும் காற்று நின்று கிழக்குத் திசையில் இருந்து காற்றுவீசத் தொடங்கியுள்ளதால் வடகிழக்கு பருவமழை வரும் 17 ஆம் தேதி முதல் தொடங்க வாய்ப்புள்ளதாகவும், வடகிழக்கு பருவமழை இயல்பான அளவிலேயே பெய்யும் என வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்திருந்தது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னையில் அதிகபட்ச வெப்பநிலையாக 34 டிகிரி செல்சியசும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 27 டிகிரி செல்சியசும் பதிவாக வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக வடகிழக்கு பருவமழை காலம் என்பது அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்கள் தான். கடந்த ஆண்டு 44 செ.மீ. அளவில் வடகிழக்கு பருவமழை பெய்தது. இது இயல்பான அளவை காட்டிலும் 24 சதவீதம் குறைவாகும். இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை 20-ந் தேதி தான் தொடங்கவேண்டும். ஆனால் சில சாத்தியக்கூறுகள் அடிப்படையில் 3 நாட்கள் முன்னதாக எதிர்பார்க்கப்படுவது  குறிப்பிடத்தக்கது.


Tags : rainfall ,Tamil Nadu , Meteorological Center, Southwest, Monsoon, Temperature, Northeast
× RELATED தமிழ்நாட்டில் இன்று ஓரிரு இடங்களில்...