×

காஞ்சிபுரம் அருகே டாக்டர் காரை வழிமறித்து 24 சவரன் நகை கொள்ளை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மளிகை செட்டி தெருவை சேர்ந்தவர் டாக்டர் அஞ்சலி.  இவர் ஸ்ரீபெரும்புதூரில்  மருத்துவமனை நடத்தி வருகிறார். நேற்று இரவு மருத்துவமனையில் பணி முடித்துவிட்டு  காஞ்சிபுரம் நோக்கி வந்துகொண்டிருந்தார்.
அப்போது ராஜகுளம் ஏனாத்தூர் சாலையில் வந்த 3 மர்மநபர்கள் இருசக்கர வாகனத்தை காரின் முன்  வழிமறித்து நிறுத்தினர். டாக்டர் காரை நிறுத்தியதும் மர்ம நபர்கள் கார் முன்பக்க கண்ணாடியை உடைத்து, அவரிடம் இருந்த 24 சவரன் தங்க நகைகளை கத்திமுனையில் பறித்துவிட்டு தப்பினர். இதுகுறித்து காஞ்சிபுரம் தாலுகா காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் காஞ்சிபுரம் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags : Kanchipuram ,doctor , 24 shaving jewelry robbery leading to doctor's car near Kanchipuram
× RELATED அடுத்தடுத்த வீடுகளில் பணம், நகை கொள்ளை