நாகர்கோவிலில் ஓடும் ரயிலில் இருந்து முதியவரை ஆற்றில் தள்ளி செல்போன் பறித்த வாலிபர்: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்

நாகர்கோவில்: நாகர்கோவிலில் ஓடும் ரயிலில் இருந்து முதியவரை கீழே தள்ளி செல்போன் பறிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  சென்னையை சேர்ந்த மோகன்குமார் (65) என்பவர் கடந்த இரு நாட்களுக்கு முன்,  குமரி மாவட்டம் திங்கள்சந்தை அருகே உள்ள தனது உறவினரை சந்திப்பதற்காக தாம்பரம் - நாகர்கோவில்  ரயிலில் வந்து கொண்டு இருந்தார். இந்த ரயில்  மதியம் 2 மணியளவில், நாகர்கோவில் அருகே கோதை கிராமம் அருகே உள்ள பழையாற்று ரயில் பாலத்தில் மெதுவாக வந்து கொண்டு இருந்தது. அப்போது மோகன்குமார் ரயில் பெட்டியின் வாசலில் நின்றவாறு தனது உறவினர் ஒருவரிடம்  செல்போனில் பேசிக் கொண்டு இருந்தார்.

அப்போது வாலிபர் ஒருவர் வந்து, செல்போனை பறிக்க முயன்றுள்ளார். ஆனால் மோகன்குமார் செல்போனை கொடுக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர் செல்போனை பறித்ததுடன், ஓடும் ரயிலில் இருந்து மோகன்குமாரை  கீழே தள்ளினார். இதில் ரயிலில் இருந்து ஆற்றுக்குள் மோகன்குமார் விழுந்தார். ரயில் மெதுவாக சென்று கொண்டு இருந்ததுடன், ஆற்றின் கரையோரத்தில் விழுந்ததால் மோகன்குமார் உயிர் தப்பினார். உயிர் பிழைத்த மோகன்குமார், அங்கிருந்த நடந்து நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்துக்கு வந்து, ரயில்ேவ  பாதுகாப்பு படை போலீசாரிடம் தகவல் தெரிவித்துள்ளார். பின்னர், அவர் உறவினர் வீட்டுக்கு சென்றார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Nagercoil ,river , Older man fired from Nagercoil-bound train
× RELATED கத்தியை காட்டி பணம் பறிக்க முயன்றவர் கைது