×

வெள்ளகோவிலில் சினிமாவை மிஞ்சிய சம்பவம் தம்பியை தீர்த்துகட்ட குழி வெட்டி காத்திருந்த அக்கா: மகள், மருமகனிடம் தீவிர விசாரணை

வெள்ளகோவில்: மகனின் திருமண பத்திரிகை கொடுக்க வந்த பைனான்ஸ் அதிபரையும் அவரது மனைவியையும் திட்டமிட்டு  கொலை செய்த அக்காவிடமும், அவரது மகள், மருமகனிடமும் போலீசார் விசாரணை நடத்தி  வருகின்றனர். தம்பியை தீர்த்துக்கட்ட அக்கா கண்ணம்மாள் குழிவெட்டி காத்திருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. மதுரை ஆரப்பாளையம் மேலப்பொன்னகரத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ் (50). பைனான்சியர். இவரது மனைவி வசந்தமணி (47). இவர்களுக்கு சரண்யா என்ற மகளும், பாஸ்கரன் என்ற மகனும் உள்ளனர்.  சரண்யாவுக்கு திருமணம் ஆகி, மதுரையில் வசிக்கிறார். பாஸ்கரன், சென்னையில் பைனான்ஸ் மற்றும் துணிக்கடை நடத்தி வருகிறார். பாஸ்கரனுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இதற்காக, பத்திரிகை அடித்து உற்றார், உறவினர்களுக்கு  கொடுத்து வந்தனர். கடந்த 10ம் தேதி  திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் உத்தண்டிகுமாரவலசுவில் வசிக்கும் செல்வராஜின் அக்கா கண்ணம்மாள் (54) வீட்டுக்கு பத்திரிகை கொடுக்க  சென்ற தம்பதியர் மீண்டும் வீடு திரும்பவில்லை.
 
இந்தநிலையில், கரூர் மாவட்டம் சுக்காலியூர் திருச்சி அணுகுசாலையில் அனாதையாக செல்வராஜின் கார் நின்றது. தகவலின்பேரில் தாந்தோணிமலை போலீசார் பார்வையிட்டனர். பின்னர், வெள்ளகோவிலில் உள்ள கண்ணம்மாள் வீட்டுக்கு  சென்று விசாரித்தனர். அப்போது கண்ணம்மாள், டீயில் மயக்க மாத்திரை கலந்து கொடுத்து தம்பதியை கொன்று  வீட்டு பக்கத்தில் புதைத்ததாக கூறியுள்ளார். வீட்டின் பக்கத்தில் உள்ள குழிக்குள் இருவரது சடலங்களையும் போலீசார்  கண்டுபிடித்தனர். ஆனால், இரவாகிவிட்டதால் தோண்டி எடுக்கவில்லை. நேற்றும் மருத்துவ குழுவினர் வரவில்லை. இதனால் இன்று சடலங்கள் தோண்டி எடுக்கப்படும் என தெரிகிறது. எனினும், வெள்ளகோவில் மற்றும் காங்கேயம் போலீசார்  கண்ணம்மாள், மருமகன் நாகேந்திரன், மகள் பூங்கொடி இவர்களது உறவினர் ஒருவர் ஆகிய 4 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணையின் விவரம் வருமாறு: செல்வராஜ் கடந்த மாதம் தனக்கு சொந்தமான தோட்டத்தை ரூ.45 லட்சத்திற்கு விற்றுள்ளார். இதில் தனது இரு சகோதரிகளுக்கு தலா ரூ.50 ஆயிரம் கொடுத்துள்ளார். ஆனால் கண்ணம்மாள் பணத்தை வாங்க மறுத்து தனக்கு, 5 லட்சம்  தரவேண்டும் என கேட்டுள்ளார். செல்வராஜ் கடந்த 20 நாட்களுக்கு முன் கண்ணம்மாள் வீட்டுக்கு வந்து ரூ.1 லட்சத்தை தந்துவிட்டு, மகனின் திருமண பத்திரிகை கொண்டு வருவதாக தெரிவித்துள்ளார். விரக்தியடைந்த கண்ணம்மாள் தம்பியை தீர்த்துக்கட்ட திட்டமிட்டிருந்தார். மேலும், அவரது மகள் கலப்பு திருமணம் செய்து கொண்டதற்கு, செல்வராஜ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதன்காரணமாகவும் செல்வராஜ் மீது மறைமுக பகை  இருந்துள்ளது.

 இதையடுத்து கண்ணம்மாளும் அவரது மருமகனும் திருமண அழைப்பிதழ் தர வரும் போது செல்வராஜையும், அவரது மனைவியையும் கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர். இதற்காக வீட்டருகே ஏற்கனவே பெரிய குழி தோண்டி வைத்து  காத்திருந்ததாக கூறப்படுகிறது. கடந்த 10ம் தேதி செல்வராஜ் திருமண பத்திரிகை கொடுக்க மனைவியுடன் காரில் வந்துள்ளார். கண்ணம்மாளிடம் அழைப்பிதழ் தந்துவிட்டு, வீட்டில் சாப்பிட்ட பின், சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தனர். கண்ணம்மாள், தனது மருமகன் உங்களை பார்த்து பேச வேண்டும் என நினைக்கிறார். சிறிது நேரம் காத்திருங்கள் வந்துவிடுவார் என தெரிவித்துள்ளார். சிறிதுநேரத்தில் 5 பேருடன் வந்த நாகேந்திரன், தம்பதியரை தாக்கி கொன்று குழிக்குள்  புதைத்து விட்டு, யாருக்கும் சந்தேகம் வராமல் இருக்க காரை தான்தோன்றிமலை பகுதியில் சாலையோரம் நிறுத்தி விட்டு சென்றுள்ளார். இவ்வாறு விசாரணையில் தெரியவந்தது.

Tags : incident ,Wellakovil ,investigation ,brother ,son-in-law , Sirasthala Excavation of cinema in Wellakovil
× RELATED எடியூரப்பா மீதான போக்சோ வழக்கு குற்றப் புலனாய்வு பிரிவுக்கு மாற்றம்