×

தனியார் மயமாவதாக கூறி பதற்றம் ஏற்படுத்துவதா?: ராதாகிருஷ்ணன், முன்னாள் போக்குவரத்துத்துறை செயலாளர்

தமிழகத்தில் இ பஸ் இயக்கும் திட்டம் கொள்கை அளவில் தான் உள்ளது. இந்த பஸ் தனியார் மயமாக்கப்படுகிறது என்பது தவறான தகவல்; அப்படி ஒரு திட்டமும் கிடையவே கிடையாது. இ பஸ்கள் அரசு மூலம் தான் இயக்கப்படுகிறது.  தற்போது மத்திய அரசு, எலக்ட்ரிக் பஸ்களை சொந்தமாக வாங்கி கொள்ளலாம் அல்லது ஒப்பந்த அடிப்படையில் வாங்கி கொள்ளலாம் என்று கூறியுள்ளனர். அதன்படி எப்படி வாங்குவது என்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு தான் வருகிறது.  மாசு பாதிப்பு, சுற்றுச்சூழல் பாதிப்பு இல்லாத வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்பது தான் அரசின் கொள்கை. இந்த வகையில், சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படாதவாறு 2 ஆயிரம் பஸ்கள் வாங்கப் போகிறோம். இதை தவிர்த்து  10ல் இருந்து 30 சதவீதம் தான் எலக்ட்ரிக் பஸ் வாங்கப்படுகிறது. மற்றவை சுற்றுச்சூழல் பாதிக்காத பஸ்களாக தான் வாங்கப்படவிருக்கிறது.

எலக்ட்ரிக் பஸ் தொடர்பாக இன்னும் முழுமையான எந்த முடிவும் எடுக்கவில்லை. டிரைவரை அவர்களே நியமித்து நாம் பணத்தை கலெக்ட் செய்கிேறாமா அல்லது அவர்கள் பணத்தை கலெக்ட் செய்து நம்மிடம் பணத்தை திரும்ப  கட்டப்போகிறார்களா என்பதெல்லாம் இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை. இது பற்றி வரும் தகவல்கள் எல்லாம் அதிகாரப்பூர்வமானவை அல்ல.  இந்த எலக்டரிக் பஸ்கள் வாங்கும் போதே பஸ் பராமரிப்பு, சார்ஜிங் வசதி, சார்ஜிங்கான துணை மையங்கள் அமைத்தல் உள்ளிட்ட ஏற்பாடுகள் எல்லாம் செய்ய வேண்டியுள்ளது. புதிதாக இது போன்ற ஏற்பாடுகளை செய்ய வேண்டி இருப்பதால்,  இந்த எலக்ட்ரிக் பஸ் இயக்குவது தொடர்பாக உடனடி முடிவு எடுக்கப்படவில்லை. இது பற்றி விரிவான ஆலோசனைகளுக்கு பின்னர் தான் உரிய இறுதி முடிவெடுக்கப்படும். அதற்கு முன்னதாக சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படாதவாறு பஸ்கள்  வாங்கப்படுகிறது. 2 ஆயிரம் பேருந்து அடுத்த மார்ச் மாதத்தில் புதிதாக வாங்கப்பட்டு பயன்பாட்டில் வருகிறது. இது மக்களுக்கு பயனுள்ளதாக அமையும்.

மத்திய அரசின் திட்டத்தின் கீழ் எலக்ட்ரிக் பஸ் திட்டம் எப்படி வருகிறது என்பதை இப்போதைக்கு சொல்ல முடியாது. நாம் இப்போது தலா 1 கி.மீக்கு எவ்வளவு கட்டணம் வாங்கப்போகிறோம் என்பது தொடர்பாகவும் முடிவு எடுக்கப்படவில்லை.  அதிக விலைக்கு பஸ் வாங்க வேண்டுமா என்ற யோசனை ஒரு பக்கம் இருக்கிறது. அப்படி இருக்கையில் இந்த பஸ் தனியார் வசம் போகும் என்று கூறுவது தவறு.  ஒரு குழந்தை பிறக்க இன்னும் 7 மாதம் இருக்கிறது என்றால் 3 மாதத்தில் இது, ஆண் குழந்தையா, பெண் குழந்தையா என்று யோசித்து பார்க்கக் கூடாது. முடிவும் செய்து விடக்கூடாது.  10 மாதங்கள் கழித்தால் அந்த குழந்தை ஆணா,  பெண்ணா என்பது தெரியும்.

அது போன்று தான் இந்த திட்டம் கொள்கை அளவில் தான் உள்ளது. எனவே இதை கொண்டு வருவதற்கு முன்பே பணியாளர்களை, தொழிலாளர்களை அச்சுறுத்தக் கூடாது. எங்களுக்கு பணியாளர்களுடன் சுமூகமான உறவு இருக்கிறது. இந்த  திட்டத்தை வைத்து அவர்களை பதற்றப்படுத்தக் கூடாது. இந்த எலக்ட்ரிக் பஸ்சை இயக்குவதில் தொழில்நுட்ப சவால்கள் வேறு இருக்கிறது. முதலில் 2 பஸ்களை இயக்கி பார்த்த பின் தான் ஒரு முடிவுக்கு வர  முடியும். அதன் பிறகு தான் இ  பஸ்களை எந்த வகையில், எவ்வளவு இயக்குவது என்பது தொடர்பாக எல்லோரிடமும் கலந்து பேசி முடிவு எடுக்கப்படும்.


Tags : Radhakrishnan , Radhakrishnan, Former Transport Secretary
× RELATED சென்னையில் சிறுமியை கடித்து குதறிய...