×

தனியார் கைக்கு போகும் போக்குவரத்து கழகங்கள் தெலங்கானா கதி தமிழகத்துக்கு வருமா?

ஒரே நாடு ஒரே மொழி, தேர்தல், ரேஷன், கல்வி என்ற வரிசையில், போக்குவரத்து துறைகளிலும் மத்திய அரசு கைவைக்க தயாராகி விட்டது. ரயில்வேயில் தனியார் மயத்தை புகுத்த தீவிரமாக இறங்கி விட்ட மத்திய அரசு இப்போது  மாநிலங்களின் பிடியில் உள்ள போக்குவரத்து கழகங்களையும் படிப்படியாக ஒன்றுமில்லாமல் செய்து விட்டு, தனியார் வசம் போக்குவரத்தை விட சிவப்பு கம்பளம் விரித்து விட்டது.  ஐதராபாத், மும்பை, பெங்களூரு, கொல்கத்தா நகரங்களை தொடர்ந்து சென்னைக்கு இப்போது ஆபத்து நெருங்கி விட்டது. போக்குவரத்து கழகங்களை  தனியார் வசமாக்க முதல் படியாக மின்சார பஸ்கள் இயக்குவதை தனியாரிடம்  விடச்சொல்கிறது மத்திய அரசு. இதற்கு தமிழக அரசும் தலையாட்டி அடுத்த கட்ட நடவடிக்கையில் குதித்து விட்டது.

இப்போது இந்தியாவில் 1.5 லட்சம் வாகனங்கள் மின்சார மயமாகி விட்டன. இன்னும் 4 ஆண்டில் ஒட்டுமொத்த வாகனங்களில் 5 சதவீத வாகனங்கள் மின்மயமாக வேண்டும் என்பதே மத்திய அரசின் இலக்கு. டீசல் வாங்கும் செலவு ₹20 லட்சம்  கோடி குறையும், 1 ஜிகா டன் கார்பன் டை ஆக்சைடு வெளியாகி மாசுபடுவது தவிர்க்கப்படும் என்று மத்திய அரசு சொன்னாலும், போக்குவரத்து கழகங்களை தனியார் வசம் ஒப்படைப்பதால் பல லட்சம் தொழிலாளர்கள் நடுத்தெருவுக்கு  வந்துவிடுவர் என்பதை அரசு யோசித்ததா  என்று தெரியவில்லை.  தனியார் மயத்தை எதிர்த்து தெலங்கானாவில் பெரும் போராட்டத்தை போக்குவரத்து ஊழியர்கள் நடத்தி வருகின்றனர். இந்த கதி தமிழகத்துக்கு வருமா? இதோ நான்கு திசைகளில் ஒரு ஆழமான அலசல்:

Tags : Telangana ,Telangana Kathi ,Tamil Nadu , Will the Telangana Kathi come to Tamil Nadu?
× RELATED மாடு குறுக்கே வந்ததால் 30 பயணிகளுடன் சென்ற பஸ் வீட்டின் மீது மோதி விபத்து