×

உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில் குளறுபடி: செம்பாக்கம் மக்கள் குற்றச்சாட்டு

தாம்பரம்: செம்பாக்கம் நகராட்சியில் உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில் குளறுபடி உள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். தாம்பரம் தொகுதிக்கு உட்பட்ட செம்பாக்கம் நகராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. இதில் 65 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள திருமலை நகர் பகுதியில் 3200 வாக்காளர்களை கொண்டு புதிதாக 3வது  வார்டு மறு வரையறையில் உருவாக்கப்பட்டுள்ளது.இந்த 3வது வார்டுக்கான வாக்காளர் பட்டியல் கடந்த 4ம் தேதி வெளியிடப்பட்டது. இதில், 190க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் பெயர் விடுபட்டுள்ளது. 14.12.2018 அன்று வெளியிடப்பட்ட அரசிதழ் அறிக்கையில் இந்த 3வது வார்டுக்கான எல்லைகள்  நிர்ணயிக்கப்பட்டது. அதில், வடக்கில் நன்மங்கலம் ஏரி சர்வே எண்கள் 2, 4, 10, 11, 12, 19, 22, 153, 154, 155ம், கிழக்கில் ஜெயேந்திர நகர் சர்வே எண் 156ம், தெற்கில் வேம்புலி அம்மன் நகர், பிரசாந்த் காலனி, செந்தில் அவென்யூ வார்டு எண் 4, பாக்கியம் நகர்  தொடங்கி நவநீதம் நகர் வார்டு எண் 11ம், மேற்கில் செம்பாக்கம் ஏரி சர்வே எண்கள் 2, 3, 5, 52, 53, 54 என எல்லைகள் நிர்ணயிக்கப்பட்டது.

மேற்கண்ட எல்லைக்குள் அடங்கிய 74 தெருக்கள், பட்டியலிலும் வெளியிடப்பட்டுள்ளது. அந்த பட்டியலின்படி வரிசை எண் 38ல் மகாசக்தி காலனியும், வரிசை எண் 42ல் பிரசாத் காலனியும், வரிசை எண் 48ல் திருமலை நகர் 1வது தெருவும்  இடம்பெற்றுள்ளன. அரசு வெளியிட்ட 3வது வார்டுக்கான எல்லைகளை மறுவரையறை படியும், தெருக்களின் பட்டியல் படியும் மற்றும் வரைபடத்திலும் திருமலை நகர் 1வது தெரு, மகாசக்தி காலனி, பிரசாத் காலனி விரிவு வாக்காளர்கள் இடம்  பெற்றுள்ளனர்.ஆனால், கடந்த 4ம் தேதி வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில் மட்டும் மேற்கண்ட தெருக்களை சேர்த்து 190க்கும் மேற்பட்ட வாக்காளர்களின் பெயர்கள் விடுபட்டுள்ளன. விடுபட்டுள்ள வாக்காளர்களின் விவரம்:விடுபட்டுள்ள பாகம் மற்றும் வரிசை எண்கள் நாடாளுமன்ற தேர்தல் 2019ன்படி, திருமலை நகர் 1வது தெரு, பாகம் எண் 212ல் வரிசை எண் 492 முதல் 650 வரை உள்ள 118 வாக்காளர்கள்.மகாசக்தி காலனி - பிரசாந்த் காலனி விரிவு, பாகம் எண் 211ல் வரிசை எண்கள் 1175, 1176, 1194, 1195, 1197, 1198, 1202, 1203, 1211, 1212, 1224, 1225, 1241, 1242, 1244, 1247, 1261, 1262.பாகம் எண் 213ல் வரிசை எண்கள் 1, 9, 14, 15, 24, 29, 37, 49, 76, 78, 108, 109, 110, 111, 112, 113, 151, 152, 154, 155, 156, 158, 159, 161, 163, 167, 168, 176, 177, 125, 126, 129, 130, 131, 132, 133, 134, 135, 136, 137, 138, 139, 150, 186, 187, 188, 189, 190, 191, 192, 213,  215, 216, 217, 218, 219, 220.

அதேபோல புதிய 5வது வார்டு, 12வது வார்டு மற்றும் சில வார்டுகளில் ஏற்கனவே இருந்த 300க்கும் மேற்பட்ட வாக்காளர்களை வேறு வார்டுகளுக்கு மாற்றப்பட்டுள்ளது.பெண்களுக்கான வார்டு என அறிவிக்கப்பட்டிருந்த வார்டுகள் அனைத்தும் தெருக்கள் பெயர்கள் அறிவித்த பின்னர் ஆண்களுக்கான வார்டு என மாற்றப்பட்டுள்ளது. இதுபோன்ற குளறுபடிகளால் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் மேற்கண்ட  தெருக்களில் வசித்துவரும் வாக்காளர்கள் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்ற முடியாத சூழ்நிலை நிலவி வருகிறது.இதுகுறித்து மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் அனுப்பி இருப்பதாகவும், சம்மந்தப்பட்ட உயர் அதிகாரிகள் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : elections , Local Elections, Trouble, Voter List
× RELATED மக்களவை தேர்தலையொட்டி சிறப்பு...