×

3 கோடி செக் மோசடி வழக்கு நடிகை அமீஷாவுக்கு கைது வாரன்ட்: விஜய் படத்தில் நடித்தவர்

ராஞ்சி:  நடிகர் விஜய் படத்தில் நடித்த நடிகை அமீஷா பட்டேலுக்கு எதிரான செக் மோசடி வழக்கில் நீதிமன்றம் கைது வாரன்ட் பிறப்பித்துள்ளது. பாலிவுட் நடிகை அமீஷா பட்டேல். இவர் நடிகர் விஜய்யின் ‘புதிய கீதை’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். பல்வேறு இந்தி படங்களிலும் நடித்துள்ளார். மேலும், இந்தியில் பிக்பாஸ்-13ல் பங்கேற்றுள்ளார். இந்நிலையில், அமீஷாவுக்கு  எதிரான செக் மோசடி வழக்கில் நீதிமன்றம் கைது வாரன்ட் பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக அஜய்குமார் சிங் என்பவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நடிகை அமீஷா படேல் மற்றும் அவரது தொழில்முறை கூட்டாளியான குணால்  என்பவருடன் சேர்ந்து படம் தயாரிப்பதற்காக ரூ.2.5 கோடியை என்னிடம் இருந்து வாங்கி இருந்தனர். 2018ம் ஆண்டு படம் வெளியிடப்பட்ட பின்னர் பணத்தை எனக்கு திருப்பி தருவதாக உறுதியளித்தனர். ஆனால், படம் ரிலீஸ் ஆகவில்லை.  பணத்தை வாங்குவதற்காக அமீஷாவை அணுகியபோது, அவர் ரூ.3 கோடிக்கான செக்கை கொடுத்தார்.

ஆனால், பணம் இன்றி அந்த ெசக் திரும்பி விட்டது. அமீஷா மற்றும் அவரது நண்பர் குணால் இருவரும் எனது செல்போன்  அழைப்புக்களை ஏற்கவில்லை. தகுந்த பதிலும் தரவில்லை. எனவே, இது குறித்து ராஞ்சி நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு வழக்கு தொடர்ந்தேன். நீதிமன்றம் அமீஷாக்கு எதிராக கைது வாரன்ட் பிறப்பித்துள்ளது’ என கூறப்பட்டுள்ளது. இது குறித்து அஜய்யின் வழக்கறிஞர் கூறுகையில், “ கடனை திரும்ப கேட்டு செய்த அழைப்புக்களை அவர் நிராகரித்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் சந்தித்தபோது, 10சதவீத வட்டி மற்றும் லாபத்தில் 10 சதவீதம் சேர்த்து ஏறத்தாழ ரூ.2.50-3 கோடியை  அடுத்த சில மாதங்களில் தருவதாக கூறியுள்ளார். இது குறித்து நடிகையை அணுகியபோது செக் கொடுத்துள்ளார். அந்த செக் வங்கி கணக்கில் பணமின்றி திரும்பி வந்துள்ளது. எனவே தான் நடிகை மீது அஜய் வழக்கு தொடர்ந்தார். அவர்  போலீசாரால் கைது செய்யப்படுவார்” என்றார்.


Tags : Czech ,Vijay Actress Ameesha: Vijay , 3 crore, fraud, case, actress Ameesha
× RELATED செக் மோசடி வழக்கில் மின்சார வாரிய...