×

உள்ளூர் விற்பனை சரிந்தாலும் பயணிகள் வாகன ஏற்றுமதி அதிகரிப்பு

புதுடெல்லி: நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில், பயணிகள் வாகன ஏற்றுமதி 4 சதவீதம் அதிகரித்துள்ளது. விற்பனை சரிவால் ஆட்டோமொபைல் துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பல லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர். பண்டிகை சீசனாக இருந்தும், தொடர்ந்து 11வது மாதமாக கடந்த மாதமும் விற்பனை சரிந்துள்ளது. இந்நிலையில், இந்திய  ஆட்டோமொபைல் உற்பத்தியாளர் சங்கம் (சியாம்) வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான முதல் அரையாண்டில் 3,65,282 வாகனங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுளளன. முந்தைய நிதியாண்டில் இது 3,49,951 ஆக இருந்தது. இத்துடன் ஒப்பிடுகையில் ஏற்றுமதி 4 சதவீதம்  அதிகரித்துள்ளது.

 இதில் கார்கள் ஏற்றுமதி 5.61 சதவீதம் உயர்ந்து 2,86,495 ஆகவும், பல் பயன்பாட்டு வாகனங்கள் 77,397 ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. அதேநேரத்தில் வேன்கள் ஏற்றுமதி 27.57 சதவீதம் சரிந்து, 1,390 வேன்கள் மட்டுமே ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. முந்தைய ஆண்டு இந்த எண்ணிக்கை 1,919 ஆக இருந்தது என கூறப்பட்டுள்ளது.



Tags : Although, local sales , Exports, increase
× RELATED சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின்...