இன்ஸ்டாகிராமில் 3 கோடி பாலோயர்ஸை கடந்த மோடி: அமெரிக்கா அதிபர் ட்ரம்ப், ஒபாமாவை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்தார் பிரதமர் மோடி..!

டெல்லி: இன்ஸ்டாகிராமில் 3 கோடி பாலோயர்ஸை கடந்தார் பிரதமர் மோடி; இதன் மூலம் உலக தலைவர்களில் அதிக  பாலோயர்ஸ்களை கொண்டவர் என்ற பெருமையை பிரதமர் மோடி பெற்றார். பிரதமர் மோடியின் இன்ஸ்டாகிராம் கணக்கைப் பின்தொடர்ந்து வருபவர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர். அதன் அடிப்படையில் அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் மற்றும் ஒபாமாவை பின்னுக்கு தள்ளி பிரதமர் மோடி முதலிடம் பிடித்தார். இன்ஸ்டாகிராமில் டிரம்பை 14.9 மில்லியன் பேர் பின் தொடர்கின்றனர்.

ஒபாமாவை 24.8 மில்லியன் பேர் பின் தொடர்கின்றனர். இந்நிலையில், பிரதமர் மோடியை பின் தொடர்வோரின் எண்ணிக்கை 30 மில்லியனை தாண்டியுள்ளது. 2009-ஆம் ஆண்டு குஜராத் முதலமைச்சராக இருந்த போது நரேந்திர மோடி தனது ட்விட்டர் கணக்கை தொடங்கினர். தற்போது நாட்டின் பிரதமராக இருக்கும் மோடி ட்விட்டரில் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். அதன் அடிப்படையில் 50.7 மில்லியன் பாலோயர்ஸ்களை கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பல உலகநாடுகளுக்கு சுற்றுப்பயணங்கள் மேற்கொண்ட போதிலும் ஆகஸ்டில் அரபு நாடுகளிலும்,

அமெரிக்காவின் ஹூஸ்டனிலும் மிகப்பெரிய மோடிக்கு மிகுந்த வரவேற்பு கிடைத்தது. இதனிடையே சமீபத்தில் மாமல்லபுரத்திற்கு வருகை சீன அதிபருடன் மோடி நட்பு பாராடியவிதமும் அவரை வரவேற்று உபசரித்த விதம் உலகின் கண்களை திரும்பிப் பார்க்க வைத்தது குறிப்பிடத்தக்கது. உலக அளவில் அதிக மக்கள் பின்தொடரும் அரசியல் தலைவராக பிரதமர் மோடி முதலிடத்தில் இருக்கிறார். இது பிரதமர் மோடியின் புகழ் மற்றும் இளைஞர்களுடனான அவரது தொடர்புக்கு மற்றொரு சாட்சி என்று பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா கூறியுள்ளார்.

Related Stories:

>