மின்னொளியில் மாமல்லபுரம் சிற்பங்களை கண்டுகளிக்க சென்ற மக்கள் ஏமாற்றம்

மாமல்லபுரம்: மின்னொளியில் மாமல்லபுரம் சிற்பங்களை கண்டுகளிக்க சென்ற மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். சிற்பங்கள் மற்றும் கடற்கரை கோயிலில் அலங்கார மின்விளக்குகள் அணைக்கப்பட்டு இருந்ததால் மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். கடற்கரை கோயில், அர்ச்சுனன் தபசு, இந்துரதம் உள்ளிட்ட இடங்களை மின்விளக்கு அலங்காரத்தில் கண்டுகளிக்க ஏராளமானோர் குவிந்தனர். பிரதமர் மோடி - சீன அதிபர் ஜின்பிங் சந்திப்பை ஒட்டி சிற்பங்களுக்கு அழகூட்டும் வகையில் மின்விளக்குகள் அமைக்கப்பட்டு இருந்தன.


Tags : Mamallapuram , Mamallapuram sculpture, people are disappointed
× RELATED சீனாவில் சுற்றுலா பயணிகளை கவரும்...