×

திட்டக்குடி காவல் நிலையம் சார்பில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கஷாயம் வழங்கல்

திட்டக்குடி: பொது சுகாதாரத்துறை சார்பில் திட்டக்குடி காவல் நிலையத்தில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு முகாம் நடந்தது. முகாமில் அரசு சித்தா மருத்துவர் பெரியசாமி கலந்து கொண்டு பேசும்போது, டெங்குநோயை பரப்பும் கொசுக்கள் பகலில் குறிப்பாக காலை 9 மணிமுதல் 11 மணிவரையிலும் மாலையில் 3 மணிமுதல் 5 மணிவரையிலும் தான் அதிகமாக கடிக்கும். வீடுகளின் உட்பகுதியில் இந்த கொசுக்கள் அதிகமாக இருக்கும் இந்த நோயின் அறிகுறி இருந்தால் உடனடியாக மருத்துவமனைகளை அணுக வேண்டும் வீடுகளில் வெளியே கிடக்கும் உபயோகமற்ற பாத்திரங்களை தண்ணீர் தேங்காத வகையில் கவிழ்த்து வைக்க வேண்டும்.

கொசு அதிகமுள்ள இடங்களில் தேங்காய் எண்ணையை கற்புரத்துடன் கலந்து உடல் முழுவதும் தேய்த்துக் கொண்டால் கொசு கடிக்காது என வலியுறுத்தினார். நிலவேம்பு, மலைவேம்பு, பப்பாளி இலை சாறு ஆகியவற்றின் முக்கியத்துவம் குறித்து நலக்கல்வி வழங்கப்பட்டது. முகாமில் காவல்துறை சார்பில் இன்ஸ்பெக்டர் பிரியா, சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன், தலைமை காவலர் ராஜா, வெற்றிவேல் சுகாதார ஆய்வாளர்கள் ஹரிபாஸ்கர், சுப்பிரமணியன், அறவாழி, சித்தமருத்துவ பிரிவு உதவியாளர் மாலதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags : public , Thottukudi, Police Station, Landslide Tincture
× RELATED வாக்குப்பதிவு நடைபெறும் இன்று வெப்ப...