×

விடிய விடிய பெய்த மழையால் திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்துகொட்டுவதால் குளிக்கத் தடை: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் விடிய விடிய பெய்த மழையால் திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்துகொட்டுவதால் சுற்றுலாபயணிகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.குமரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக தொடா்ந்து கனமழை பெய்து வருகிறது. மலையோரப் பகுதிகள் மற்றும் அணைகளின் நீா்ப்பிடிப்பு பகுதிகளில் மழை அதிகமாகப் பெய்கிறது. இதனால், அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளதுடன், அணைகளின் நீா்மட்டமும் உயா்ந்து வருகிறது. இந்நிலையில் மாவட்டம் முழுவதும் நேற்று இரவு முதல் விடிய விடிய மழை கொட்டியது, இதன்காரணமாக கோதையாறு, தாமிரபரணி ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

கோதையாற்று வெள்ளத்தால் திற்பரப்பு அருவியில் தண்ணீர் அபாயகரமாக ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. திற்பரப்பு அருவியின் 6 பகுதியில் 4 இடங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. தொடர்ந்து கோதை ஆற்றிலும் படகு சவாரி ரத்து செய்யப்பட்டுள்ளது. இன்று ஞாயிறு விடுமுறை என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ள நிலையில் அருவியில் குளிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். ஒரு சிலர் மட்டும் குறைவாக தண்ணீர் விழும் பகுதியில் நின்று குளித்துச் சென்றனர்.

Tags : flooding , Rain, open waterfall, bathing, tourists, disappointment
× RELATED தேனி அணைப்பிள்ளையார் தடுப்பணையில் வெள்ளப்பெருக்கு..!!