×

சிரியாவின் எல்லையிலுள்ள குர்துக்கள் மீது தாக்குதல் நடத்தி வரும் துருக்கிக்கான ஆயுத விற்பனையை நிறுத்திவைக்க பிரான்ஸ் அரசு முடிவு

பிரான்ஸ்: சிரியாவின் எல்லையிலுள்ள குர்துக்கள் மீது தாக்குதல் நடத்தி வரும் துருக்கிக்கான ஆயுத விற்பனையை நிறுத்திவைக்க பிரான்ஸ் அரசு முடிவு செய்துள்ளது. துருக்கி எல்லையை ஒட்டிய சிரியாவின் வடபகுதியில் ஆதிக்கம் செலுத்தி வரும் குர்து இன போராளிகளை குறிவைத்து, துருக்கி ராணுவம் கடந்த 9ம் தேதி முதல் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் அந்த பகுதிகளில் இருந்து ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் வெளியேறிவிட்டனர். துருக்கியின் இந்த தாக்குதலுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே சமரசம் செய்து வைக்க தயார் என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார்.

பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானும், சிரியா மீதான துருக்கியின் ஒருதலைபட்சமான தாக்குதல் கடும் கண்டனத்திற்குரியது என ட்விட்டரில் கருத்து தெரிவித்திருந்தார். இந்நிலையில் பிரான்ஸ் நாட்டின் பாதுகாப்பு மற்றும் வெளியுறவு துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள கூட்டு அறிக்கையில், சிரியா மீதான தாக்குதலில் பயன்படுத்தப்படலாம் என்ற காரணத்தினால் துருக்கிக்கான ஆயுத விற்பனைக்கு தடை விதிக்க முடிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 14ம் தேதி நடைபெறவுள்ள ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு சபையில், இந்த விவகாரம் தொடர்பான ஐரோப்பிய நாடுகளின் அணுகுமுறையை ஒருங்கிணைக்க முயற்சி மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : government ,Kurds ,Turkey ,Syria ,French ,border ,Turkish , French government ,decides, suspend arms ,Turkish troops,Kurds,Syria
× RELATED துருக்கியில் உள்ளூர்...