×

2018-ல் சென்னை அண்ணா நகரில் 19 வீடுகளில் நகை கொள்ளை போன வழக்கில் முருகனை காவலில் எடுத்து விசாரிக்க போலீஸ் முடிவு

சென்னை: 2018 ல் சென்னை அண்ணா நகரில் 19 வீடுகளில் நகை கொள்ளை போன வழக்கில் முருகனை காவலில் எடுத்து விசாரிக்க போலீஸ் முடிவு செய்துள்ளது. 2018-ம் வருடம் நடந்த கொள்ளை தொடர்பாக திருவாரூரில் முருகனின் கூட்டாளிகள் மட்டும் 7 பேர் கைது செய்யப்பட்டனர். கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளியான முருகன் தலைமறைவானதால் கைது செய்ய முடியாமல் போலீஸ் திணறியது. முருகனின் கூட்டாளிகளிடமிருந்து 3 கிலோ தங்கம், 5 கிலோ வெள்ளி, 1000 யூரோ டாலர், 2 வாக்கி டாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளியான முருகன் தலைமறைவானதால் கைது செய்ய முடியாமல் போலீசார் திணறியது குறிப்பிடத்தக்கது. தற்போது திருச்சி லலிதா ஜூவல்லரியில் ரூ.13 கோடி மதிப்பிலான நகை கொள்ளைபோன வழக்கில் முருகன் கைது செய்யப்பட்டுள்ளான். முருகனை போலீஸ் காவலில் எடுத்தால் 2018-ல் நடந்த கொள்ளையில் மீதமுள்ள நகைகளை பறிமுதல் செய்யமுடியும் என போலீசார் கருதகின்றனர். லலிதா ஜூவல்லரியில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளில் இதுவரை ரூ.5 கோடி மதிப்புள்ள நகைகள் மட்டுமே போலீசாரால் மீட்கப்பட்டுள்ளது.

மற்ற நகைகள் முருகனிடம் இருப்பதாக கூறப்பட்டது. சுமார் ரூ.8 கோடி மதிப்புள்ள தங்கம், வைரம், பிளாட்டினம் நகைகளை முருகன் எங்கு பதுக்கி வைத்துள்ளான் என்பதை போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தால் தான் உண்மை தெரியும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஏற்கனவே முருகனின் கூட்டாளி சுரேசை போலீஸ் காவலில் 10 நாட்கள் எடுத்து விசாரிக்க திருச்சி கோர்ட்டில் தனிப்படை போலீசார் மனு செய்துள்ளனர். முருகனையும் 10 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க பெங்களூர் கோர்ட்டில் போலீசார் திங்கட்கிழமை மனு தாக்கல் செய்ய உள்ளனர். இதற்கிடையே போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தாலும் முருகனிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் முழுவதும் மீட்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனென்றால் இதுவரை 50க்கும் மேற்பட்ட கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய முருகனிடமிருந்து ஒரு சில வழக்குகளில் மட்டுமே கொள்ளையடிக்கப்பட்ட நகை, பணத்தை போலீசார் மீட்டுள்ளனர்.

Tags : Murukan ,robbery ,houses ,theft ,Anna ,Chennai ,arrest , ,investigate,jewelery robbery ,19 houses,Chennai
× RELATED நாகை மாவட்டம் கீழ்வேளூரில் அருகே தீ...