×

10 ரூபாய்க்கு சாப்பாடு, மின் கட்டணம் குறைப்பு சிவசேனா கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீடு

மும்பை: மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தல் அக்டோபர் 21ம் தேதி நடக்கிறது. வாக்கு எண்ணிக்கை 24ம் தேதி எண்ணப்படுகிறது. இந்த தேர்தலில் பாஜ.வுடன் கூட்டணி அமைத்து போட்டியிடும் சிவசேனா, மொத்தம் 124 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. இந்த நிலையில், ேநற்று மும்பை பாந்த்ராவில் உள்ள உத்தவ் தாக்கரேயின் ‘மாதோ’ இல்லத்தில் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: மாநிலம் முழுவதும் சுமார் 1,000 உணவகங்கள் அமைக்கப்பட்டு அவற்றில் 10 ரூபாய்க்கு முழு சாப்பாடு வழங்கப்படும். வீடுகளுக்கான மின்சார கட்டணம் 30 சதவீதம் குறைக்கப்படும். மாநிலம் முழுவதும் உள்ள விவசாயிகள் கடன் இல்லாத விவசாயிகளாக மாற்றப்படுவார்கள்.

மருத்துவ பரிசோதனைக்காக மாநிலம் முழுவதும் ‘ஒரு ரூபாய் கிளினிக்’ தொடங்கப்பட்டு அவற்றில் 200 வகையான நோய்களுக்கு பரிசோதனைகள் செய்யப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன.
தேர்தல் அறிக்கையை வெளியிட்டு பேசிய உத்தவ் தாக்கரே பெண்கள் சம்பந்தப்பட்ட பிரச்னைகளுக்கு தேர்தல் அறிக்கையில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாக கூறினார். மும்பை, ஆரே காலனியில் மெட்ரோ திட்டத்துக்காக மரங்கள் வெட்டுவது குறித்து எந்த அறிவிப்பும் இதில் வெளியிடவில்லை.

Tags : Shiv Sena , Meals, electricity tariff reduction, Shiv Sena party, election manifesto
× RELATED நாகப்பட்டினம் சில்லடி தர்கா கடற்கரையில் ரம்ஜான் பண்டிகை சிறப்பு தொழுகை