×

பிரதமர் மோடியின் சகோதரர் மகளிடம் கொள்ளை

புதுடெல்லி: பிரதமர் மோடியின் சகோதரர் மகளிடம் நடந்த கொள்ளை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் கடந்த சில மாதங்களாக நகை பறிப்பு, செல்போன் பறிப்பு போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. பெண்கள் உள்பட 5 பத்திரிகையாளர்களின் செல்போன், கைப்பைகள் பறிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், பிரதமர் மோடியின் சகோதரர் பிரகலாத் மோடியின் மகள் தமயந்தி பென் மோடி, அவரது கணவர் ஆகியோர் அமிர்தசரஸில் இருந்து டெல்லிக்கு வந்தனர். நேற்று காலை 8.10 மணிக்கு வடக்கு டெல்லியிலுள்ள குஜராத் சமாஜ் பவான் செல்வதாக ஆட்டோவில் வந்துள்ளனர். ஆட்டோவுக்கு பணம் கொடுக்க பர்ஸை ைகயில் எடுத்த போது, ஸ்கூட்டரில் வந்தவர்கள் அவரிடமிருந்து பையை பறித்து சென்றனர். இதுபற்றி போலீசார் விசாரிக்கின்றனர்.

Tags : brother ,Modi , PM Modi, brother's daughter, robbery
× RELATED பிரதமர் மோடியின் பேச்சுக்காக...