×

இரண்டு நாள் பயணம் முடிந்து நாடு திரும்பிய சீன அதிபரை கார் வரை வந்து வழியனுப்பி வைத்தார் மோடி

சென்னை: இரண்டு நாள் பயணம் முடிந்து நாடு திரும்பிய சீன அதிபர் ஜின்பிங் கார் வரை வந்து கைகுலுக்கி பிரதமர் மோடி வழியனுப்பி வைத்தார்.இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்த, சீன அதிபர் ஜின்பிங்குக்கு தமிழக பாரம்பரியம்படி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. நேற்று முன்தினம் மதியம் விமானத்தில் வந்து, பின்னர் மாலை சாலைமார்க்கமாக மாமல்லபுரம் வந்த சீன அதிபர் ஜின்பிங்கை பிரதமர் மோடி கைகுலுக்கி முறைப்படி வரவேற்றார். அதைத்தொடர்ந்து மாமல்லபுரத்தில் உள்ள புராதன சிற்பங்களை இரு நாட்டு தலைவர்களும் பார்வையிட்டனர்.நேற்று 2வது நாளாக பிரதமர் மோடிக்கும், சீன அதிபர் ஜின்பிங்குக்கும் இடையே கோவளம் கடற்கரை அருகே உள்ள நட்சத்திர ஓட்டலில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

அப்போது சீன அதிபர் கார் அருகே வந்து பிரதமர் மோடி கைகுலுக்கி வரவேற்றார். காலை 10.10 மணியில் இருந்து மதியம் 12.50 மணி வரை சீன அதிபரும் - பிரதமர் மோடியும் இணைந்து பேச்சுவார்த்தை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர். இரண்டு நாட்கள் நிகழ்ச்சிகள் அனைத்தையும் முடித்துக்கொண்டு சீன அதிபர் ஜின்பிங் நேற்று மதியம் 12.50 மணிக்கு சென்னை, கோவளம் நட்சத்திர ஓட்டலில் இருந்து விடைபெற்றார். அப்போது பிரதமர் மோடி சீன அதிபரை கார் அருகே வந்து கைகுலுக்கி வழியனுப்பி வைத்தார். பின்னர் சீன அதிபர் காரில் புறப்பட்டு சென்றபோது, வணக்கம் தெரிவிக்கும் வகையில் கைகளை கூப்பி முறைப்படி வழி அனுப்பி வைத்தார். சீனாவில் இருந்து வந்த மற்ற அதிகாரிகளும் அதிபருடன் அடுத்தடுத்த கார்களில் புறப்பட்டனர். அவர்களுக்கும் பிரதமர் மோடி கை காட்டி வழியனுப்பி வைத்தார்.

Tags : President ,Modi ,Chinese ,trip ,home , Chinese President, Car, Modi
× RELATED ரஷ்ய அதிபர் புடினை போன்று ஜனநாயகத்தை...