×

மூர்மார்க்கெட் - சூலூர்பேட்டை இடையே மின்சார ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை:  பராமரிப்பு பணிகள் காரணமாக மூர்மார்க்கெட் - சூலூர்பேட்டை இடையே மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: சென்னை மூர்மார்க்கெட் - சூலூர்பேட்டை இடையே நாளை  காலை 5.30 மணிக்கும், சூலூர்பேட்டை - நெல்லூர் இடையே காலை 8 மணிக்கும், நெல்லூர் - சூலூர்பேட்டை இடையே காலை 10 மணிக்கும், சூலூர்பேட்ைட - சென்னை மூர்மார்க்ெகட் இடையே பிற்பகல் 12.20 மணிக்கும் இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. மேலும், திருவனந்தபுரம் - சில்சர் எக்ஸ்பிரஸ் கூடூர் ரயில் நிலையத்தில் இன்று 1.30 மணி நேரமும், சென்ட்ரல் - கவுகாத்தி வாராந்திர எக்ஸ்பிரஸ் பாலி ரெட்டிப்பாளையத்தில் நாளை 2.10 நிமிடமும், சென்ட்ரல் - ஹவுரா எக்ஸ்பிரஸ் கூடூர் ரயில் நிலையத்தில் 20 நிமிடமும் நின்று புறப்படும்.  இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Moormarket - Sulurpet ,cancellation ,Southern Railway , Moormarket, Sulurpet, electric trains canceled, Southern Railway
× RELATED தெற்கு ரயில்வே கோட்டத்தில் ரயில்...