×

கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு

பெரியகுளம்: தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே 8 கி.மீ தொலைவில் கும்பக்கரை அருவி அமைந்துள்ளது. கொடைக்கானல் மலையடிவாரத்தில் இயற்கை சூழலில் அமைந்துள்ள இந்த அருவியில் மேற்கு தொடர்ச்சி மலைவனப்பகுதி மற்றும் கொடைக்கானலில் பெய்யும் கனமழை காரணமாக நீர்வரத்து இருக்கும். சில நாட்களாக நீர்வரத்து முற்றிலும் இல்லாத நிலையில், அருவி வறண்டு காணப்பட்டது. இந்நிலையில் கடந்த 2 நாட்களாக மேற்குதொடர்ச்சி மலை மற்றும் கொடைக்கானல் மலைப்பகுதியில் மாலை மற்றும் இரவு நேரத்தில், பரவலாக பெய்த கனமழையினால்  கும்பக்கரை அருவிக்கு நீர்வரத்து துவங்கியது. தற்போது அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலாப்பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.


Tags : Kumbakarai Falls ,Flooding , Flooding, Kumbakarai Falls
× RELATED கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி!