×

பிரதமர் மோடி- சீன அதிபர் ஜின்பிங்ற்க்கு மொழிப்பெயர்ப்பாளராக செயல்பட்ட தமிழர்... மதுசூதன் குறித்து வியக்கவைக்கும் தகவல்

சென்னை: பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபர் ஜின்பிங் மொழிப்பெயர்ப்பாளராக செயல்பட்ட தமிழகர் குறித்து சுவாரஷ்யமான தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று சீன அதிபர் ஜின்பிங் இந்தியாவில் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நேற்று மதியம் சென்னை வந்தார். மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி, சீன அதிபர் சந்திப்பின் போது அவர்களுடன் மேலும் 2 பேர் உடனிருந்தனர். அதில் ஒருவர் சீனர், மற்றோருவர் மதுசூதன் ரவீந்திரன் எனும் இந்திய அதிகாரி. ஒரு தலைவர்களுக்குமான மொழிபெயர்ப்பாளராக செயல்பட்டு வரும் மதுசூதன் சீன தலைநகர் பெய்ஜிங்கில் இருக்கும் இந்திய தூதரகத்தின் முதன்மை செயலர் ஆவார்.

கடந்த ஆண்டு சீனாவில் நடைபெற்ற மோடி- ஜின்பிங் சந்திப்பில் மொழியாற்றுமாறு கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் அங்கும் உடனிருந்த மதுசூதன் தற்போதும் மொழிபெயர்ப்பாளராக பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். சென்னை அண்ணா பல்கலை கழகத்தில் பொறியியல் படித்த மதுசூதன் இந்திய வெளியுறவு பணியில் 2007-ம் ஆண்டு பேட்ச் அதிகாரி ஆனார். பணியில் பெரும்பாலான நாட்களை சீனாவில் கழித்த மதுசூதனுக்கு சீனாவின் அதிகார பூர்வ மொழியான மாண்டரின் மொழி உள்பட பல மொழிகள் நன்கு தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது.


Tags : Modi ,Tamils ,President ,Chinese ,interpreter ,Jinping ,Jinpinr ,Madhusudhan ,Madhusudan , PM Modi, Chinese President Jinping, Madhusudhan
× RELATED கீழ்த்தரமான அரசியல்வாதி போல பிரதமர்...