×

ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் ஜோகோவிச்சை வீழ்த்தினார் சிட்சிபாஸ்: அரை இறுதிக்கு முன்னேற்றம்

பெய்ஜிங்: சீனாவில் நடைபெறும் ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரின் அரை இறுதியில் விளையாட, கிரேக்க வீரர் ஸ்டெபனாஸ் சிட்சிபாஸ் தகுதி பெற்றார். கால் இறுதியில் நம்பர் 1 வீரர் நோவாக் ஜோகோவிச்சுடன் (செர்பியா) மோதிய சிட்சிபாஸ் 3-6 என்ற கணக்கில் முதல் செட்டை இழந்து பின்தங்கினார். பின்னர் சுதாரித்துக் கொண்டு விளையாடி கடும் நெருக்கடி கொடுத்த அவர் 7-5 என 2வது செட்டை கைப்பற்றி பதிலடி கொடுக்க 1-1 என சமநிலை ஏற்பட்டது. அதே வேகத்துடன் 3வது செட்டில் ஜோகோவிச்சின் சர்வீஸ் ஆட்டங்களை முறியடித்து புள்ளிகளைக் குவித்த சிட்சிபாஸ் 3-6, 7-5, 6-3 என்ற செட் கணக்கில் போராடி வென்று அரை இறுதிக்கு முன்னேறினார். விறுவிறுப்பான இப்போட்டி 2 மணி, 3 நிமிடத்துக்கு நீடித்தது. லண்டனில் அடுத்த மாதம் நடைபெற உள்ள ஏடிபி உலக டூர் பைனல்ஸ் (நவ. 10-17) தொடரில் பங்கேற்கவும் சிட்சிபாஸ் தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.Tags : Shanghai Masters ,Dennis Djokovic ,Semi-Finals ,Semi-Final. Shanghai Masters Tennis Jokoviccai , Shanghai Masters Tennis, Djokovic, Sitsibas, Semi-Final
× RELATED அப்துல் கலாம் அவர்களின்...