×

சேலம் சிறையில் மாவோயிஸ்ட் உண்ணாவிரதம்

சேலம்: கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டையை சேர்ந்தவர் பகத்சிங் (34). மாவோயிஸ்ட்டான இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் கைது செய்யப்பட்டு, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் பகத்சிங், காலை  மற்றும் மதிய உணவை சாப்பிடாமல் திடீரென உண்ணாவிரதம் இருக்கப்போவதாக கூறினார். அவரிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தன்னை பார்க்க தர்மபுரியை சேர்ந்த பழனிவேல் என்பவர் மனு போட்டுள்ளார். அதனை  சிறை நிர்வாகம் ஏற்கவில்லை. காரணம் பழனிவேல், மாவோயிஸ்ட் கைதியாக சிறையில் இருந்தவர் என்பதால் அனுமதி மறுக்கப்பட்டது தெரியவந்தது. இதன்காரணமாக, பகத்சிங் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார். நேற்று இரண்டாவது  நாளாக உண்ணாவிரதத்தை தொடர்ந்தார்.

Tags : Salem ,Maoist ,jail , Salem prison, La Maoist, fasting
× RELATED சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே...