திருச்சியில் 2 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்

திருச்சி: சிங்கப்பூரில் இருந்து நேற்றுமுன்தினம் இரவு ஸ்கூட் விமானம் திருச்சி வந்தது. இதில் வந்த பயணிகளிடம் சுங்க அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சென்னையை சேர்ந்த அசாருதீனிடமிருந்து 7 லட்சத்து 19 ஆயிரம் மதிப்புள்ள  188 கிராம் மதிப்புள்ள தங்கத்தையும், அப்துல்ஹமீது என்ற பயணியிடம் இருந்து 7 லட்சத்து 25 ஆயிரம் மதிப்புள்ள 189.5 கிராம் தங்கத்தையும், தேவகோட்டையை சேர்ந்த செல்லம் என்ற பயணியிடமிருந்து 5 லட்சத்து 86 ஆயிரம் மதிப்புள்ள  159.7 கிராம் தங்கத்தையும் பறிமுதல் செய்தனர்.

இதே போன்று மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து நேற்று அதிகாலை மலிண்டோ விமானம் திருச்சி வந்தது. இதில் வந்த ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்த முகம்மதுஆசிக் என்ற பயணியிடம் 12 லட்சத்து 51 ஆயிரம்  மதிப்புள்ள 327 கிராம் தங்கமும்,  துபாயில் இருந்து திருச்சி வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான பயணியான காஞ்சிபுரத்தை சேர்ந்த ஜாகிர் உசேன் என்பவரிடமிருந்து 20.89லட்சம் மதிப்புள்ள 546 கிராம் தங்கமும், அதே விமானத்தில்  பயணம் செய்த எஸ்பி பட்டினத்தை சேர்ந்த பவுசுல்ஹக் என்ற பயணியிடம் இருந்து 20.38 லட்சம் மதிப்புள்ள 532.5 கிராம் தங்கத்தையும் பறிமுதல் செய்தனர். ஜாகீர்உசேன், பவுசுல்ஹக் கைது செய்யப்பட்டனர்.

Tags : Trichy Trichy , Trichy, smuggling, confiscation of gold
× RELATED சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை...