×

அடுத்தடுத்து 6 பேரை கொன்றது எப்படி? போலீசில் ஜோளி பரபரப்பு வாக்குமூலம்

திருவனந்தபுரம்: கேரளாவில் அடுத்தடுதது 6 பேரை கொன்றது எப்படி என்பது குறித்து கொலைக்காரி ஜோளி போலீசில் தெரிவித்தார். கேரள  மாநிலம், கோழிக்கோடு அருகே உள்ள கூடத்தாயி பகுதியை சேர்ந்தவர் ராய்தாமஸ்   மனைவி ஜோளி. கடந்த 2002 முதல் 2016க்கு உட்பட்ட  காலகட்டத்தில் இவருடைய கணவர்  ராய்தாமஸ், மாமனார், மாமியார் உள்பட 6 பேர் அடுத்தடுத்து மர்மமான முறையில் இறந்தனர். இது தொடர்பாக  விசாரணை நடத்திய ேபாலீசார்,  ஜோளி, அவருடைய உறவினர் மேத்யூ, பிரஜிகுமார் ஆகிய 3  பேரை கைது செய்தனர். இவர்களை போலீசார் காவலில் எடுத்து நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்  வெளியாகி உள்ளன. கணவர், மாமனார் உள்பட 5 பேரை  சயனைடு கொடுத்து கொன்றதாகவும், மாமியார்  அன்னம்மாவுக்கு பூச்சி கொல்லி மருந்து கொடுத்ததாகவும் ஜோளி கூறியுள்ளார். கணவரை கொன்றபோது 2 பிள்ளைகளையும் மாடியில் தங்க வைத்துவிட்டு உணவில் விஷம் கலந்து  கொடுத்ததாக தெரிவித்துள்ளார்.

ஜோளியின் 2வது கணவர் ஷாஜூவின் மனைவி சிலி, பல் வலிக்காக தாமரசேரியில் உள்ள ஒரு  மருத்துவமனைக்கு சென்றார். அவருடன் ஜோளியும் சென்றார். மருத்துவரை  பார்க்க காத்திருந்தபோது சிலி திடீரென ஜோளியின்  மடியில்  மயங்கி விழுந்தார். உடனே அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு  சென்றனர். வழியிலேயே சிலி மரணம் அடைந்தார். மருத்துவரை பார்ப்பதற்கு முன்பு  சிலி பல் வலிக்கான மாத்திரை சாப்பிட்டுள்ளார். அப்போது சிலிக்கு  தெரியாமல்  தண்ணீரில் சயனைடு கலந்து கொடுத்ததாக ஜோளி கூறியுள்ளார்.  கொலை நடந்த  வீட்டிற்கு ஜோளியை நேற்று அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது வீட்டின் கீழ்தளத்தில் உள்ள படுக்கை அறையில் இருந்து ஒரு காலி  பூச்சிக்கொல்லி மருந்து பாட்டிலும், தோட்டத்தில் இருந்து ஒரு பாட்டிலும் கைப்பற்றப்பட்டன.

மாமியார் அன்னம்மாவை பூச்சி கொல்லி மருந்து காெடுத்து கொன்றதாக ஜோளி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. இதன்பிறகு ேஜாளியின் முதல் கணவர் ராய் தாமசின் மாமா மேத்யூ வீட்டிற்கு போலீசார் அழைத்து சென்று விசாரித்தனர்.  மேத்யூவிற்கு மதுவில் சயனைட் கலந்து கொடுத்ததாக இவர் போலீசில் தெரிவித்திருந்தார். இருவரும் அடிக்கடி ஒன்றாக மது அருந்தியுள்ளனர். மேத்யூவை கொல்வதறகு இரண்டு நாட்களுக்கு முன்னர் கூட இருவரும் ஒன்றாக மது அருந்தியது  குறிப்பிடத்தக்கது. ஜோளியை அழைத்து சென்ற இடங்களில் எல்லாம் மக்கள் குவிந்து அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பினர்.

என்ஐடி மாணவரிடம் விசாரணை
கோழிக்கோடு என்ஐடி வளாகத்தில் ஜோளி ஒரு ஸ்கூட்டருடன் எடுத்த  புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வலம் வருகிறது. இது  பற்றி போலீசார் விசாரித்தபோது, அது என்ஐடியில்  படிக்கும் மாணவருக்கு சொந்தமான ஸ்கூட்டர் என்பது  தெரிந்தது.  விசாரணையில், மாணவருக்கும், ஜோளிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும், தற்செயலாக  ஸ்கூட்டர் முன்பு நின்று புகைப்படம் எடுத்ததும் தெரிந்தது.

கோவை சென்றது ஏன்?
 ஜோளியின் செல்போன் விவரங்களை போலீசார்  சேகரித்தபோது,  கடந்த ஓணம் பண்டிகை விடுமுறை  தினங்களில் இவரது செல்போன் கோவையில் இருந்ததை டவர் பதிவு மூலம்  கண்டுபிடித்தனர். இது குறித்து ஜோளியிடம்  விசாரித்தபோது, ‘கோவை  செல்லவில்லை. கட்டப்பனைக்குதான் சென்றேன்,’ என்றார். அவரது  பேச்சில் சந்தேகம் இருந்ததால், போலீசார் அவரது மகன் ரோமோவிடம்  விசாரித்தனர். அப்போது அவர், ஜோளி பலமுறை கோவை சென்று  வந்ததாக கூறினார். அதனால், அவர் எதற்காக கோவைக்கு சென்றார்? அங்கு யாரையெல்லாம்  சந்தித்தார் என்பது குறித்து விசாரிக்க, போலீசார் ஜோளியை  கோவைக்கு அழைத்து செல்ல முடிவு செய்துள்ளனர்.



Tags : Jolie , Confession, Kerala murderer, murders
× RELATED வெகுஜன புதைகுழியாக மாறியுள்ளது காசா: இஸ்ரேலுக்கு ஏஞ்செலினா ஜூலி கண்டனம்