×

அடுத்தடுத்து கொலைகள் மே. வங்க அரசை கலைக்க வேண்டும்: ஜனாதிபதியிடம் பாஜ முறையிட முடிவு

கொல்கத்தா: மேற்கு வங்க மாநில பாஜ பொறுப்பாளரும், அக்கட்சியின் பொதுச் செயலாளருமான கைலாஷ் விஜய்வர்கியா நேற்று அளித்த பேட்டி: மேற்கு வங்கத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டது. பட்டபகலிலேயே மக்கள் கொலை  செய்யப்படுகின்றனர். கடந்த சில நாட்களில் மட்டுமே, 8 பாஜ நிர்வாகிகள் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். இது மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் முடங்கியிருப்பதை எடுத்துக் காட்டுகிறது. எனவே, முதல்வர் மம்தா பானர்ஜி இனியும்  பதவியில் நீடிக்கும் தார்மீக உரிமையை இழந்து விட்டார். அவர் உடனடியாக பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இது தொடர்பாக, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து முறையிட நேரம்  கேட்டுள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார். கடந்த 2 ஆண்டில் மேற்கு வங்கத்தில் 80 பாஜ நிர்வாகிகள் கொலை செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன. இதற்கு பதிலடி கொடுத்துள்ள ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் ,  ‘இது  ஆதாரமற்ற குற்றச்சாட்டு. முதலில் பாஜ ஆளும் மாநிலங்களில் அக்கட்சி சட்டம் ஒழுங்கை காப்பாற்றட்டும்,’ என கூறியுள்ளது.

Tags : killings ,Government ,President ,Bengal , Subsequent killings, West Bengal State, President, BJP
× RELATED விவசாயிகளின் எந்த எதிர்பார்ப்பையும்...