×

1965ம் ஆண்டு முதன் முதலாக விண்வெளியில் நடந்தவர் மரணம்

மாஸ்கோ: முதன் முதலாக விண்வெளியில் நடந்த விண்வெளி வீரர் அலெக்சி லியேனோவ் காலமானார். அவருக்கு வயது 85.   முன்னாள் சோவியத் யூனியனை சேர்ந்த விண்வெளி வீரர் அலெக்சி லியோனோவ். இவர் 1965ல் வாஸ்கோத் 2  விண்கலத்தின் வெளியே சுமார் 12 நிமிடங்கள் 9 விநாடி நடந்து, விண்வெளியில் நடந்த முதல் மனிதன் என்ற பெருமை பெற்றார். இவரது நண்பர் யூரி ககாரின் 1961ல் விண்வெளிக்கு சென்ற முதல் மனிதர் என்ற சாதனை படைத்தார். நான்கு  ஆண்டுகளுக்கு பிறகு விண்வெளியில் நடந்த முதல் வீரர் என்ற பெருமையை அலெக்சி லியோனோவ் பெற்றார். நீண்டகாலமாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அலெக்சி லியோனோவ், மாஸ்கோவில் உள்ள பர்டென்கோ  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி நேற்று மரணம் அடைந்தார்.  விண்வெளி சாதனைக்காக இவர் சோவியத் ஹீரோ விருதை 2 முறை பெற்றுள்ளார். இவரை பெருமைப்படுத்தும் வகையில், இவரது உருவம்  பொறித்த சோவியத் அஞ்சல் தலை வெளியிடப்பட்டது. இதுதவிர உலக அளவில் பல்வேறு விருதுகள் இவருக்கு கிடைத்துள்ளன.



Tags : Death ,astronaut ,First Astronaut , Space, Death
× RELATED பாட்னா ரயில் நிலையம் அருகே ஓட்டலில்...