×

நீட் தேர்வு ஆள் மாறாட்ட வழக்கு உரிய ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் : சிபிசிஐடிக்கு கோர்ட் உத்தரவு

தேனி: நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தது தொடர்பான வழக்கில்,  சிபிசிஐடி தரப்பில் உரிய ஆவணங்களை வரும் 14ம்  தேதி ஒப்படைக்க வேண்டுமென தேனி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மருத்துவக்கல்லூரிகளில் சேர்வதற்கான நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்ததாக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மாணவர் உதித்சூர்யா பிடிபட்டார். இந்த விவகாரத்தில், சிபிசிஐடி போலீசார், மாணவர் உதித்சூர்யா மற்றும் அவரது தந்தை வெங்கடேசனை கைது செய்தனர். இதேபோல, சென்னையை சேர்ந்த மாணவர்கள் பிரவீன், அவரது தந்தை சரவணன், ராகுல், அவரது தந்தை டேவிட் ஆகியோரையும் கைது செய்தனர். இவர்கள் 4 பேரையும் ஜாமீனில் விடக்கோரி தேனி குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.  இம்மனு மீதான விசாரணை நேற்று மாஜிஸ்திரேட் பன்னீர்செல்வம் முன்னிலையில் நடந்தது.

விசாரணையின்போது நீதிபதி, போலீஸ் இவ்வழக்கு விஷயத்தில் சரியாக பணி புரியவில்லை. குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் கேட்கப்படும் கேள்விகளுக்கு உரிய ஆவணங்களை தரவில்லை. வரும் 14ம் தேதி சிபிசிஐடி தரப்பில் உரிய ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். எனவே, ஜாமீன் மனு விசாரணை அன்றைய தேதிக்கு ஒத்தி வைக்கப்படுகிறது’’ என்று மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.4 பேருக்கு காவல் நீட்டிப்பு: இதனிடையே இந்த 4 பேரின் சிறைக்காவல் முடிவடைந்ததால், மாஜிஸ்திரேட் பன்னீர்செல்வம் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். இவ்வழக்கை விசாரித்த பன்னீர்செல்வம், 4 பேருக்குமான சிறைக்காவலை அக்.25ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார். இதனையடுத்து 4 பேரும் தேனி சிறையில் அடைக்கப்பட்டனர்.

Tags : NEET SELECTION TRANSACTION Case Transfer , Neet selection case,submit the relevant documents , Transfer Case
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...