×

மானாமதுரை அருகே பயங்கரம் பள்ளி மாணவியை மிரட்டி பலாத்காரம் : போக்சோவில் 4 பேர் கைது

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த 14 வயது சிறுமி அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். அந்த மாணவியை அதே ஊரைச் சேர்ந்த சிவசாமி மகன் விஷ்வா (20) காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி நெருக்கமாக பழக்கமாகி உள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன் அந்த மாணவியுடன் தனிமையில் எடுத்துக்கொண்ட நெருக்கமான புகைப்படத்தை காண்பித்து மிரட்டி விஷ்வா பலாத்காரம் செய்துள்ளார்.

அதனை தனது செல்போனில் வீடியோவாகவும் எடுத்து வைத்து தனது நண்பர்களான கவியரசன் (22), அருண்பாண்டி (21), ஆகாஷ்(19) ஆகியோருக்கும் விஷ்வா அனுப்பி உள்ளார். இதைத்தொடர்ந்து கவியரசன், அருண்பாண்டி, ஆகாஷ் ஆகியோர் அந்த படத்தை காண்பித்து மிரட்டி அந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதனால் அந்த மாணவிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால், இதுகுறித்து மாணவியின் தாய் விசாரித்துள்ளார்.
அப்போது தனக்கு நடந்த கொடுமை குறித்து மாணவி, தாயிடம் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தாய், மானாமதுரை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் விஷ்வா, அவரது நண்பர்கள் கவியரசன், அருண்பாண்டி, ஆகாஷ் ஆகியோர் மீது போக்சோ உட்பட 11 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து  கைது செய்தனர். இச்சம்பவம் மானாமதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Terror school ,Manamadurai ,School , School girl rape, intimidate
× RELATED மானாமதுரை வாரச்சந்தையில் சமூக...