×

குடிப்பதற்கு சுவையான இளநீர் இரு நாட்டு தலைவர்களும் மர நிழலில் சுவாரஸ்ய பேச்சு

இரு நாட்டு தலைவர்களும் மாமல்லபுரத்தில் உள்ள வெண்ணை உருண்டை பாறையை பார்வையிட்டனர். பிறகு அங்குள்ள ஐந்து ரத பகுதியை ரசித்தனர். அப்போது, ஐந்து ரதத்தின் வரலாற்றையும் சீன அதிபருக்கு மோடி விளக்கினார். அதை ஆர்வத்தோடு அவர் கேட்டார். ஒவ்வொரு சிற்பமாக சீன அதிபருக்கு விளக்கப்பட்டது. அதன் அதிசயத்தை கேட்டு சீன அதிபர் வியந்து போனார். தொடர்ந்து, இருவரும் ஐந்து ரதம் பகுதியில் அமர்ந்து பேசுவதற்காக அங்கிருந்த தென்னை மரத்திற்கு அடியில் இரண்டு சேர்கள் போடப்பட்டிருந்தன. மரத்தின் நிழலில் அமர்ந்து இருவரும் பேசினர். அப்போது தமிழகத்தின் பாரம்பரிய பானமான இளநீர் பரிமாறப்பட்டது. பிரதமர் மோடி அதனை வாங்கி சீன அதிபருக்கு வழங்கி உபசரித்தார். சீன அதிபர் அப்படியே இளநீரை குடிக்க முற்பட்டார்.

அப்போது, பிரதமர் மோடி இளநீருக்கு அடியில் இந்த பேப்பரை வைத்து கொள்ளுங்கள் என்று அளித்தார். பேப்பர் மேல் இளநீரை வைத்து, அதன்பின் சீன அதிபர் ருசித்து குடித்தார். தொடர்ந்து இருவரும் சர்வசாதாரணமாக பேசினர். மோடி பேசியதை  அங்கிருந்த மொழி பெயர்ப்பாளர் சீன அதிபருக்கு விளக்கினார். அதே போல் சீன  அதிபர் பேசியதை சீன மொழி பெயர்ப்பாளர் மோடிக்கு விளக்கினார். சிறிது நேர தனி உரையாடலுக்கு பிறகு இரண்டு தலைவர்களும் ஐந்து ரத பகுதியை சுற்றி வந்து பார்வையிட்டனர். அப்போது இருவரும் அங்கு கைக்குலுக்குவது போல புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

Tags : leaders , Tasty water ,drinking ,Both leaders , wood shade
× RELATED சென்னையில் தலைமைச் செயலாளர் சண்முகம்...