×

தமிழர்களின் பாரம்பரிய உணவுகளான இட்லி, சாம்பாரை ருசித்து சாப்பிட்ட சீன அதிபர் : மதிய உணவில் அரிசி சாதத்தை சுவைத்தார்

சென்னை: தமிழர்களின் பாரம்பரிய உணவுகளை சீன அதிபர் ருசித்து சாப்பிட்டார். மதியம் அரிசி சாதமும், இரவு இட்லி, சாம்பாரை விரும்பி சாப்பிட்ட சீன அதிபர் அந்த உணவுகளை பற்றி சமையல் கலைஞர்களிடம் கேட்டு தெரிந்து கொண்டுள்ளார். தமிழகம் வருகை தந்துள்ள சீன அதிபர் ஜின் பிங்கிற்கு தமிழக பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. மாமல்லபுரத்தில் இந்திய பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின் பிங் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இதற்காக சீன அதிபர் தங்கியுள்ள கிண்டி ஐடிசி கிராண்ட் சோழா ஓட்டல் முதல் மாமல்லபுரம் வரை சாலை வழியாக சென்றார். அப்போது வழி நெடுக கிராமிய முறைப்படி கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்கிடையே, நேற்று மதியம் சென்னை விமான நிலைய வந்திறங்கிய ஜின் பிங் கிண்டியில் உள்ள ஓட்டலுக்கு வந்தார். அப்போது அவருக்கு மதிய உணவு பரிமாறப்பட்டது. அவருக்கான சீன உணவு வகைகளுடன் தென்னிந்திய உணவுகளும் இடம்பெற்றது. குறிப்பாக தமிழ்நாட்டின் பாரம்பரிய உணவு வகைகளும் பரிமாறப்பட்டது.

மதிய உணவுடன் அரிசி சாதம் இடம்பெற்றிருந்தது. அதை விரும்பி சாப்பிட்டார். அவற்றை பற்றிய தகவல்களை சமையல் கலைஞர்களிடம் கேட்டுள்ளார். மேலும் அதனுடன் பரிமாறப்பட்ட குழம்பு வகைகளையும் விரும்பி சாப்பிட்டார். இதேபோன்று நேற்று இரவு மாமல்லபுரத்தை பிரதமர் மோடியுடன் சுற்றி பார்த்த ஜின் பிங்கிற்கு அங்கேயே இரவு விருந்து அளிக்கப்பட்டது. அதிலும் தமிழ்நாட்டு பாரம்பரிய உணவு வகைகள் இடம்பெற்றிருந்தது. குறிப்பாக இட்லி, சாம்பார், சட்னியை விரும்பி சாப்பிட்டுள்ளார். அதனுடன் பூரி, இடியாப்பம், வெண் பொங்கல் போன்ற உணவுகளும் பரிமாறப்பட்டுள்ளது. மேலும் காரமில்லாமல் செட்டி நாடு உணவு வகைகளையும் விரும்பி சாப்பிட்டுள்ளார். இந்த உணவு வகைகள் குறித்து சமையல் கலைஞர்கள் சீன அதிபருக்கு விளக்கி கூறினர். தொடர்ந்து அவருக்கு வழங்கப்படும் உணவு வகைகளுடன் தமிழ்நாட்டு பாரம்பரிய உணவு வகைகளான அரிசி சாதம், சாம்பார் சாதம், வத்தக்குழம்பு, ரசம் மற்றும் பிரியாணி, பிரிஞ்சி, பட்டர் நான், சப்பாத்தி, ரொட்டி, புலாவ், தக்காளி, கேரட் சூப் உள்ளிட்ட 28 வகையான உணவு வகைகள் இடம் பெற்றது.

சீன அதிபருக்கு மோடி நினைவு பரிசு

சென்னை வந்த சீன அதிபர் ஜின்பிங் மாமல்லபுரத்தில் உள்ள சிற்பங்களை பார்த்து ரசித்தார். இறுதியில் நேற்று மாலை பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளை கலாஷேத்ரா குழுவினர் நடத்தி காட்டினர். இதையடுத்து முதல் நாள் நிகழ்ச்சி முடிந்தது. தொடர்ந்து பிரதமர் மோடி, சீன அதிபருக்கு சரஸ்வதி நடனத்தை சித்தரிக்கும் தஞ்சாவூர் ஓவியம், நாச்சியார் கோயில் விளக்கு ஆகியவற்றை நினைவு பரிசாக வழங்கினார்.

இரு நாட்டு அதிகாரிகள் அறிமுகம்

கடற்கரை கோயிலை இரண்டு நாட்டு தலைவர்களும் சுற்றி பார்த்தனர். தொடர்ந்து பிரதமர் மோடி இந்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கரை சீன அதிபருக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். தொடர்ந்து, இந்திய அதிகாரிகள் ஒவ்வொருவராக சீன அதிபருக்கு மோடி அறிமுகம் செய்தார். அதன் பிறகு சீன அதிபர் தன்னுடன் வந்துள்ள குழுவினர்களை ஒவ்வொருவராக பிரதமர் மோடிக்கு அறிமுகம் செய்து வைத்தார். அப்போது அவர்களுக்கு இரு நாட்டு தலைவர்களும் கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தனர்.

Tags : Chancellor ,Tamils ,Chinese , Chinese chancellor, tasted , Idli,sambar
× RELATED தமிழர்கள் தலைநிமிர்ந்து வாழ ஒன்றியத்தில் ஆட்சி மாற்றம்