×

சர்வ சாதாரணமாக பேன்ட், சர்ட்டில் சீன அதிபர்

சீன அதிபர் வழக்கமாக அணியும் உடைக்கு பதிலாக சாதாரணமாக பேன்ட், சர்ட் அணிந்து மாமல்லபுரத்தை கேஷுவலாக சுற்றி பார்த்தது ரசிக்க வைத்தது. பிரதமர் மோடியும் சீன அதிபர் ஜின்பிங்கும் மாமல்லபுரம் சிற்பங்களை சுற்றி பார்த்தனர். அப்போது, சீன அதிபர் ஜின்பிங் வழக்கமாக அணியும் கோட், சூட்டுக்கு பதிலாக நார்மல் உடையில் வந்திருந்தார். கருப்பு பேன்ட், வெள்ளை சட்டை அணிந்திருந்தார். பிரதமர் மோடி வேட்டி, சட்டை, தோளில் துண்டு அணிந்திருந்தார். இதை பார்த்த சீன அதிபர், இந்த உடை உங்களுக்கு அழகாக உள்ளது என தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதற்கு பிரதமர் அவருக்கு நன்றி தெரிவித்தார்.

வேட்டி, சட்டை அணிந்து அசத்திய மோடி

தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை அணிந்து பிரதமர் மோடி அசத்தினார். சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜின்பிங்கின் சந்திப்பு நேற்று நடந்தது. இதில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி நேற்று காலை சென்னை வந்தார். சென்னை வந்த போது அவர் வழக்கமாக அணியும் பைஜாமா குர்தா அணிந்து இருந்தார். இந்த நிலையில் சீன அதிபருடனான சந்திப்பு மாலையில் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி வழக்கமாக அணியும் உடையை அணியவில்லை. அதற்கு பதிலாக தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி, வெள்ளை சட்டை அணிந்து வந்தார். தோளில் துண்டும் போட்டிருந்தார். பிரதமர் மோடியின் இந்த புதிய தோற்றத்தை பலரும் ரசித்தனர்.


Tags : Chinese ,Chancellor ,Band ,Chart. ,President , Chinese President,Pant ,shirt
× RELATED தேர்தல் வெற்றிக்கு வாழ்த்து...