×

அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரேமலதா 2 நாள் பிரசாரம்

சென்னை: அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து, பிரேமலதா விஜயகாந்த் 2 நாட்கள் பிரசாரம் செய்கிறார். இதுகுறித்து, தேமுதிக தலைமை கழகம் வெளியிட்ட அறிக்கை: நடைபெறவிருக்கும் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து கட்சி தலைவர் விஜயகாந்த் ஆணைக்கிணங்க, பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பிரசாரம் செய்கிறார். வருகிற 15, 16ம் தேதிகளில் விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் பிரசார சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : campaign ,AIADMK , Premalatha 2 day campaign ,supporting AIADMK candidates
× RELATED கொரோனா தடுப்பு பணியில் தமிழக அரசு...