×

சேவை வரி தொடர்பான வழக்கில் நடிகர் விஷால் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்

சென்னை : சேவை வரி தொடர்பான வழக்கில் நடிகர் விஷால் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜரனார். சேவை வரி செலுத்துவது தொடர்பாக சம்மன் அனுப்பியும் நேரில் ஆஜராகாததாக சரக்கு மற்றும் சேவை வரித் துறை தொடர்ந்த வழக்கில் நடிகர் விஷால் எழும்பூர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி நீதிபதியின் கேள்விகளுக்கு பதிலளித்தார். நடிகர் விஷாலுக்கு சொந்தமான விஷால் பிலிம் பேக்டரி செலுத்த வேண்டிய சேவை வரி தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கமளிக்க சரக்கு மற்றும் சேவை வரித்துறை அதிகாரி, விஷாலுக்கு சம்மன் அனுப்பினார். இந்த சம்மனை ஏற்று ஆஜராகாமல் இருந்ததாக, விஷாலுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில்  நீதிபதி ஹெர்மிஸ் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது விசாரணைக்கு, நடிகர் விஷால் நேரில் ஆஜராகியிருந்தார். அவரிடம் நீதிபதி,  வேண்டுமென்றே சம்மனை பெறவில்லையா? வேண்டுமென்றே ஆஜராகாமல் இருந்தீர்களா?  என விஷாலிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு விஷால் அரசுத் தரப்பில் கூறப்படும் இந்த குற்றச்சாட்டுகளை மறுப்பதாக தெரிவித்தார். இதையடுத்து இந்த விசாரணை முடிவடைந்ததையடுத்து, வழக்கின் விசாரணையை நீதிபதி ஹெர்மிஸ், நவம்பர் 11ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Tags : Vishal ,court ,Egmore ,Egmore Court , Actor Vishal, appear ,Egmore court
× RELATED மருத்துவர் சைமன் உடல் அடக்கத்தை...