மோடி-ஜின்பிங் வருகைக்கு 15,000 போலீசார் பாதுகாப்பு

சென்னை: பிரதமர் மோடி- சீன அதிபர் ஜின்பிங் வருகையையொட்டி, 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டனர். இதனால், சென்னையில் ஆங்காங்கே நடத்தப்படும் ஹெல்மெட், மதுபோதை சோதனை போன்றவை இல்லாமல் இருந்தன.குறிப்பாக, நந்தனம்-கோட்டூர்புரம் பகுதி சிக்னல், மத்திய கைலாஷ், டவுட்டன், சேத்துப்பட்டு, பெரம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் சோதனை கடுமையாக இருக்கும். ஆனால், 2 தலைவர்களின் வருகைக்காக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டதால் பல்வேறு இடங்களில் சோதனைகள் இல்லாமல் இருந்தது. சோதனை குறைவு காரணமாக, குடிமகன்களும், ஹெல்மெட் அணியாமல் சென்றவர்களும் நேற்று முன்தினம் இரவில் இருந்து நேற்றிரவு வரை நிம்மதியாக சென்றனர்.

Related Stories:

>