×

மோடி- ஜின்பிங் சந்திப்பை முன்வைத்து பாஜ-அதிமுக அரசியல் ஆதாயம் தேட முயன்றால் பலன் கிடைக்காது

சென்னை:    தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னைக்கு பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங் ஆகியோர் வருகை புரிவதை தமிழக காங்கிரஸ் சார்பாக வரவேற்கிறேன். இந்தியாவுக்கும், சீனாவுக்கும் பல்வேறு பிரச்னைகள் தீர்க்கப்படாமல் நீண்டகாலமாக இருந்து வருகின்றன. இன்றைக்கும் பல்வேறு பிரச்னைகளில் இந்தியாவின் நலன்களுக்கு விரோதமாக சீனா செயல்பட்டு வருகிறது. இலங்கையில் சீனாவின் முதலீடுகள் குவிக்கப்பட்டு வருகின்றன. வங்காள விரிகுடாவில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருவது இந்தியாவின் பாதுகாப்பை அச்சுறுத்தி வருகிறது.  

இத்தகைய பிரச்னைகளுக்கு தீர்வு காண இந்திய - சீன தலைவர்களின் சந்திப்பு உரிய பலனைத்தரும் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் உள்ளது.  
ஆனால், இந்திய - சீன தலைவர்களின் சந்திப்பை அரசியல் நிகழ்வாக மாற்றுவதற்கு பாஜவும், அதிமுகவும் போட்டி போட்டுக் கொண்டு செயல்பட்டு வருகின்றன. இதை அரசியலுக்கு அப்பாற்பட்ட நிகழ்வாக அணுக வேண்டுமே தவிர, அரசியல் ஆதாயம் தேடுகிற வகையில் செயல்படுவதனால் எந்த பயனும் ஏற்படப் போவதில்லை.  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Tags : meeting ,BJP-BJP , Modi-Jinping meeting , benefit, BJP-BJP seeks political gain
× RELATED வாக்காளர்களுக்கு பணம் தருவதை...