×

தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டி: 7வது இரட்டை சதத்தை பதிவு செய்தார் விராட் கோலி

புனே: தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி 7வது இரட்டை சதத்தை பதிவு செய்தார்.
இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் 2வது டெஸ்ட் போட்டி, புனேவில் உள்ள மகராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நேற்று காலை  தொடங்கியது. போட்டியில், டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோஹ்லி பேட்டிங்கை தேர்வு செய்தார்.

ஆட்டத்தின் 86வது ஓவரின் முதல் பந்து வீசிய நிலையில், போதிய வெளிச்சம் இல்லாததால், ஆட்டத்தை நடுவர்கள் முடிவுக்கு கொண்டு வந்தனர்.  இதனால், இந்தியா முதல்நாள்  ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 273 ரன்கள் எடுத்துள்ளது. கேப்டன் விராட் கோஹ்லி 63 ரன்னுடனும்,  ரகானே 18 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

டெஸ்ட் போட்டியின் 2வது நாள் ஆட்டம் இன்று தொடங்கியதும் கோலி - ரஹானே பொறுமையுடன் விளையாடினர். தொடர்ந்து, கேப்டன் விராட்  கோலி டெஸ்டில் 26வது சதத்தை பதிவு செய்தார். ரஹானே 59 ரன்கள் எடுத்திருந்த போது மஹாராஜ் பந்துவீச்சில் அவுட்டாகினார். ரஹானே அவுட்டானதை தொடர்ந்து ரவீந்திர ஜடேஜா களமிறங்கினார். பொறுப்புடன் விளையாடி கோலி, 297 பந்துகளை சந்தித்து 28 பவுண்டரிகளுடன்  தனது 7-வது இரட்டை சதத்தை பூர்த்தி செய்துள்ளார்.

விராட் கோஹ்லி பேட்டி:

இது இந்திய அணி கேப்டனாக விராட் கோஹ்லி பங்கேற்கும் 50வது டெஸ்ட் போட்டி. இப்போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால், தென் ஆப்ரிக்க  அணிக்கு எதிரான நடப்பு டெஸ்ட்  தொடரை கைப்பற்றி விடும். மேலும், சொந்த மண்ணில் டெஸ்ட் தொடர்களில் தொடர்ந்து 11வது வெற்றி என்ற  சாதனையும் இந்திய அணியின் வசமாகும்.

இதுகுறித்து விராட் கோஹ்லி கூறுகையில், ‘‘ஒவ்வொரு போட்டியுமே எங்களுக்கு முக்கியம்தான். நான் புள்ளி விபரங்களை கணக்கிடுவதில்லை.  டெஸ்ட் போட்டிகளை டிரா செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் ஆடிய காலம் முடிந்து விட்டது. டெஸ்ட் சாம்பியன் ஷிப்புக்காக ஒவ்வொரு  போட்டியும் கணக்கிடப்படும். எனவே, நாங்கள் வெற்றிக்காகவே ஆட விரும்புகிறோம். இப்போட்டியிலும் வெற்றியை குறி வைத்தே ஆடுவோம்.  தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் நம்பர் ஒன் இடத்தை  பெற்றுள்ளோம். இதை விட்டுத்தராமல் சிறப்பாக ஆடி தக்க வைப்போம்’’ என்றார்.


Tags : Test ,South Africa ,Virat Kohli , 2nd Test against South Africa: Virat Kohli records 7th double hundred
× RELATED ஐதராபாத் – பெங்களூரு அணிகள் இடையே...